Advertisment
Presenting Partner
Desktop GIF

ரஜினிகாந்தின் நெகிழ்ச்சியை கட்டுப்படுத்திய அண்ணாத்த படப்பிடிப்பு; காரணம் என்ன?

How Annaatthe pushed limits of Rajinikanth’s resilience: தீபாவளி கொண்டாட்டத்தை ஒட்டி நாளை (நவம்பர் 4) அண்ணாத்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தொற்றுநோய்களின் போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மனதளவிலும், உடலளவிலும் எப்படிச் சவாலாக இருந்தது என்பதைப் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
ரஜினிகாந்தின் நெகிழ்ச்சியை கட்டுப்படுத்திய அண்ணாத்த படப்பிடிப்பு; காரணம் என்ன?

இன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள அண்ணாத்த திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெகிழ்ச்சியை வரம்புகளுக்குள் தள்ளியது. 70 வயதான சூப்பர் ஸ்டாருக்கு, கொரோனா பரவல் காரணமாக, இந்தப் படத்தின் படப்பிடிப்பு மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் அழுத்தமான முயற்சியாக இருந்திருக்க வேண்டும்.

Advertisment

கொரோனா வைரஸ் நமது யதார்த்தத்தைக் கட்டுப்படுத்தத் தொடங்கி, நம்மை தலைகீழாக மாற்றியபோது, ​​வயதானவர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்கும் அபாயம் அதிகம் என்று உறுதியாக நம்பப்பட்டது. ரஜினிகாந்தின் வயது மற்றும் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து திரைப்படத் தயாரிப்பு தொடர்பான நடவடிக்கைகளை அரசாங்கம் அனுமதித்த சில மாதங்களுக்குப் பிறகும் படத்தின் தயாரிப்பு மீண்டும் தொடங்கப்படவில்லை.

2020 ஆம் ஆண்டு தீபாவளிக்கு அண்ணாத்த படத்தை திரையரங்குகளில் வெளியிடத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் முதலில் திட்டமிட்டிருந்தனர். பின்னர், வெளியீட்டு அட்டவணை 2021 பொங்கலுக்குத் தள்ளப்பட்டது, பின்னர் வெளியீட்டு இலக்கு 2021 கோடைக்கு மாற்றப்பட்டது. இதனால், 2021 கோடையில் படத்தை வெளியிட, திரைப்படத் தயாரிப்பாளர்கள் 2020 ஆம் ஆண்டு இறுதிக்குள் படத்தை முடிக்க வேண்டும். எனவே 2020 டிசம்பர் இரண்டாவது வாரத்தில் தயாரிப்பு தொடங்கியது. இது, ரஜினிகாந்த் அரசியல் கட்சியைத் தொடங்கப் போவதாகவும், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்த சில வாரங்களில் படபிடிப்பு ஆரம்பமானது.

40 சதவீத படப்பிடிப்பு நிலுவையில் இருப்பதாகவும், முழுநேரத் தேர்தலில் தன்னை அர்ப்பணித்துக்கொள்வதற்கு முன் அதை முடிப்பேன் என்றும் ரஜினிகாந்த் கூறினார். மேலும், இதற்கிடையில், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ரஜினியின் அரசியல் நுழைவுக்கு அவரது நம்பிக்கைக்குரியவர்கள் களம் தயாரிப்பார்கள் என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

அரசியல் குறித்து அறிவித்த பிறகு, அண்ணாத்த படப்பிடிப்பிற்காக தனி ஜெட் விமானத்தில் ஹைதராபாத் புறப்பட்டார் ரஜினிகாந்த். அவருடன் அவரது மகள் சௌந்தர்யாவும் வந்திருந்தார். ரஜினிகாந்தின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒரு பாதுகாப்பு குமிழியை உருவாக்கியிருந்தனர். எல்லாமே சுமூகமாகவும் திட்டப்படியும் நடப்பதாகத் தெரிகிறது. ஆனால் ஒரு வாரம் கழித்து, படக்குழு உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் படக்குழு கவலை அடைந்தது.

இந்த செய்தி நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. மேலும், ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து அனைவரும் கவலைப்பட்டனர். மேலும் மன அழுத்தம் நிறைந்த சூழ்நிலை அவரது இரத்த அழுத்தத்தில் குறிப்பிடத்தக்க ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தியது, இதனால் அவர் ஹைதராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உடல்நிலை சீரானதும் சென்னை திரும்பினார். அண்ணாத்த படத்தின் தயாரிப்பு நிறுத்தப்பட்டது. அவரது உடல்நிலை அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பை நிறுத்தியது மட்டுமல்லாமல், தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது முந்தைய அறிவிப்பை ரத்து செய்யவும் அவரைத் தூண்டியது.

“அரசியல் கட்சியை தொடங்கவோ, அரசியலுக்கு வரவோ மாட்டேன் என்பதை மிகுந்த வருத்தத்துடன் சொல்கிறேன். இந்த முடிவை எடுத்ததில் எனது வலியை யாராலும் புரிந்து கொள்ள முடியாது” என்று ரஜினிகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“எனது உடல்நிலைதான் இந்தக் கஷ்டங்களுக்குக் காரணம். சர்வவல்லமையுள்ளவர் (கடவுள்) அனுப்பிய எச்சரிக்கையாக இதை நான் பார்க்கிறேன், ”என்று ரஜினி கூறினார், இதனால் அவரது அரசியல் பிரவேசம் குறித்த கிட்டத்தட்ட மூன்று தசாப்த கால சஸ்பென்ஸ் ஒரு முடிவுக்கு வந்தது.

பின்னர், உடல் நலம் தேறிய ரஜினிகாந்த், இந்த ஆண்டு ஏப்ரல் முதல் வாரத்தில் ஹைதராபாத்தில் உள்ள அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புக்குத் திரும்பினார். மேலும் அவர் 35 நாட்களுக்கு இடைவிடாமல் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டார். மேலும், கொரோனா வைரஸின் இரண்டாவது அலை நாட்டை மற்றொரு ஊரடங்கிற்கு தள்ளுவதற்கு முன்பு தனது முக்கிய பகுதிகளை முடித்தார்.

கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்த பிறகு, இறுதிகட்ட படப்பிடிப்பிற்காக ரஜினி மீண்டும் கொல்கத்தாவிற்கு புறப்பட்டார், மேலும், தீபாவளிக்கு படத்தின் வெளியீட்டை இறுதி செய்ய சன் பிக்சர்ஸை அனுமதித்தார்.

கடந்த மாதம் வெளியான அண்ணாத்த படத்தின் ட்ரெய்லர், ரஜினிகாந்தின் உயர்-ஆக்டேன் நடிப்பின் ஒரு காட்சியை நமக்கு அளித்தது, எந்த மன அழுத்தமும் தெரியவில்லை. கேமராக்கள் இயக்கப்படும் போது, ​​அவரது முதுமை மற்றும் பிற உடல்நலக் கோளாறுகள் மாயமாக பின் இருக்கையில் அமர்ந்து, மீண்டும் ஒரு இளைஞனாக மாற அனுமதிக்கின்றன. அவர் நோய் மற்றும் கடுமையான தொற்றுநோய்களுக்கு இடையில் பணிபுரிந்தாலும், ரஜினிகாந்தின் ஆற்றல், குழந்தை போன்ற உற்சாகம் மற்றும் திரை காந்தத்தன்மை ஆகியவை ஒருபோதும் வெற்றி பெறாமல் போனதில்லை.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Rajinikanth Annaatthe Movie
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment