By: WebDesk
Updated: January 17, 2021, 07:38:58 PM
தமிழ்த் திரையுலகில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகர் அஜித். தற்போது, சதுரங்க வேட்டை, நேர்கொண்ட பார்வை போன்ற படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கும் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். கொரோனா பெருந்தொற்றிற்கு பிறகு சென்னையில் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது வலிமை படத்தில் நடிகர் அஜித் பைக்கில் ஸ்டண்ட் செய்யும் காட்சி எடுக்கப்பட்டது. அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியும் இருந்தது.
இந்நிலையில், சமீபத்தில் வாரணாசியில் சுற்றுலாவுக்கு சென்றுள்ள நடிகர் அஜித், அங்குள்ள கோடோவ்லியா மற்றும் தஷ்வமேத போன்ற பகுதிகளில் வலம் வந்துள்ளார். அந்த பகுதியில் சுவையான உணவகங்களும், பிரபலமான சாட் கடைகளும் காணப்படுகின்றன.
அந்த பகுதியில் இருந்த ஒரு பிரபல சாட் கடைக்கு நடிகர் அஜித் தொப்பியும், முகக்கவசமும் அணிந்து சென்றுள்ளார். கடைக்கு உள்ளே சென்ற அவர், தொப்பியையும், முகக்கவசத்தையும் கழற்றியுள்ளார். அப்போது தான் அங்கு இருந்தவர்களுக்கு நடிகர் அஜித் வந்துள்ளார் என தெரிய வந்தது. பின்னர் அந்த சாட் கடை முதலாளி நடிகர் அஜித்தை புன்னகை ததும்ப வரவேற்றார். அந்த சாட் கடையின் உணவு பிடித்துப் போனதால் அடுத்த நாளே விசிட் செய்துள்ளார், அதோடு சமையற் குறிப்பை தன்னுடைய மொபைல் கேமராவில் பதிவும் செய்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:How did actor ajith kumar captured at varanasi