Advertisment

அசுரன் தனுஷ் தேசிய விருது வென்றது எப்படி?

நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மனோஜ் பாஜ்பாய் என்ற நடிகருக்கும் சிறந்த நடிகருக்கான தேசிய விருது அளிக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக தேசிய விருது 2 நடிகர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
dhanush, asuran, best actor award, dhanush get best actor award, தனுஷ், சிறந்த நடிகர் விருது தனுஷ், தேசிய விருது, அசுரன், கங்கை அமரன், asuran movie, gangai amaran, national award for cinema

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படத்துக்கு 2019ம் ஆண்டுக்கான சிறந்த படத்துக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, அந்தப் படத்தில் நடித்த நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

மத்திய அரசு ஆண்டு தோறும் சினிமா துறைக்கான தேசிய விருதுகளை அறிவிக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு தேசி விருது அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், மத்திய அரசு 2019ம் ஆண்டுக்கான தேசிய விருதுகளை அறிவித்தது.

இதில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், மஞ்சுவாரியார், பசுபதி ஆகியோர் நடித்த அசுரன் படத்துக்கு சிறந்த படத்துகான சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மனோஜ் பாஜ்பாய் என்ற நடிகருக்கும் சிறந்த நடிகருக்கான தேசிய விருது அளிக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக தேசிய விருது 2 நடிகர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேசிய விருது தேர்வுக் குழுவில் ஜூரியாக இடம்பெற்ற கங்கை அமரன் விளக்கம் அளித்துள்ளார்.

அசுரன் திரைப்படம் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. அசுரன் திரைப்படம் சாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் பிரிட்டி ஆட்சி காலத்தில் தலித்துகளுகு வழங்கப்பட்ட பஞ்சமி நில உரிமை என தலித் அரசியலை காத்திரமாகப் பேசியது. அரசுன் படத்தில், தனுஷ் சந்து பற்களுடன் தந்தை வேடத்தில் நடித்தார். இதில் தனுஷின் நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

தேசிய விருது தேர்வுக் குழுவில் இடம்பெற்றிருந்த இசையமைப்பாளர், இயக்குனர், பாடகர் கங்கை அமரன், ஊடகங்களிடம் கூறுகையில், தேசிய திரைப்பட விருதுகளுக்காக ஒரு நாளைக்கு 4 படம் 5படம் என்று 105 படங்கள் வரை பார்த்திருக்கிறோம். இதில் தேர்வு செய்வது ரொம்ப கடினமாக இருந்தது. ஏனென்றால், நிறைய புதிய படங்கள் வந்திருந்தது. இதில் தமிழுக்கு சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த குழந்தை நட்சத்திரம் என்று 7 விருதுகளுக்கு மேல் கிடைத்துள்ளது. இதில் திருப்திதான். இதில் போராட வேண்டியது எல்லாம் கிடையாது. எல்லாரும் ஒத்துக்கொண்டார்கள். தனுஷின் அசுரன் படத்தை சிறந்த படமாக ஒத்துக்கொள்வதிலும் தனுஷின் சிறந்த நடிகராக ஒத்துக்கொள்வதும் எல்லோருடை மனதிலும் அது இருந்தது.

ஒத்த செருப்பு படத்தைப் பொறுத்தவரை எந்த கேட்டகிரியில் விருது கொடுப்பது என்று தெரியவில்லை. ஏனென்றால், கதை, வசனம், நடிப்பு, இயக்கம் எல்லாம் பார்த்திபன்தான் செய்திருந்தார். பெஸ்ட் படம் என்று எடுத்தார்கள். நான் என்ன கேட்டகரி என்று கேட்டேன். என்ன கேட்டகரி என்று சொல்ல முடியாது. எல்லா வகையிலும் சிறந்த படம் என்று கூறினார்கள். அதனால், சந்தோஷமாக இருந்தது.” என்று கூறினார்.

இந்த முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் தனுஷுக்கும் நடிகர் மனோஜ் பாஜ்பாய்க்கும் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. இது ஏன் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த கங்கை அமரன், “நிறைய போட்டிகள் இருந்தது. அதனால், சமாதானம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அவர் நன்றாக நடித்திருந்தார். ஆனால், எல்லோரும் தனியாகத்தான் தேசிய விருந்து கொடுக்க வேண்டும் என்று பேசினோம். ஆனால், மனோஜ் பாஜ்பாய் படத்தை பார்க்கும்போது அவருடைய நடிப்பும் சமமாக இருப்பது போல உணர்ந்ததால், அதை தவற விட வேண்டாம் என்று இது ஒரு புதிய விதியாக வந்துள்ளது என்று நினைக்கிறேன்.” என்று கூறினார்.

Dhanush National Film Awards Asuran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment