/tamil-ie/media/media_files/uploads/2022/06/nayanthara-2.jpg)
நடிகை நயன்தாராவின் திருமணத்தில் கலந்துகொண்ட நடிகர் ஷாருக்கான் கலந்துகொண்டார். சமீபத்தில்தான் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற செய்திகள் வெளியானது. இந்நிலையில் அவர் எப்படி மிக விரைவில் கொரோனாவிலிருந்து மீண்டு வந்தார் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்த நடிகை நயன்தாரா -விக்னேஷ் சிவன் திருமணத்தில் திரைப்பிரபலங்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அந்த வகையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார். தனது மேலாளரான பூஜா தத்லானி மற்றும் இயக்குநர் அட்லியுடன் அவர் தோன்றும் புகைப்படங்களும் வெளியாகின.
/tamil-ie/media/media_files/uploads/2022/06/Nayah.jpg)
மேலும் திருமணத்தில் நடிகர் ரஜின்காந்த், சூர்யா, அஜித், மணிரத்தினம் ஆகியோர் கலந்துகொண்டனர். திருமணத்தில் அசத்தலான உணவு வழங்கப்பட்டது. கேரள, தமிழ்நாடு பாரம்பரிய வகை உணவுகள் வழங்கபட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரைப்பிரலங்களுக்கு இகசிய எண் அதாவது செக்யூரிட்டு கோர்டு அனுப்பப்படும். இதை காண்பித்தால் மட்டுமே திருமணத்திற்குள் அனுப்பபடுவர் என்ற கட்டுப்பாடுகள் நிலவியது. மேலும் திருமண புகைப்படங்கள் வெளியாவதற்கு வெகு நேரம் ஆனதால் ரசிகர்கள் எரிச்சலடைந்தனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/06/Nayanthara-Vikki.jpg)
மதிய நேரத்தில்தான் புகைப்படம் வெளியானது. இது பல விமர்சனங்களை கிளப்பியது. இந்நிலையில் நடிகர் ஷாருக்கானை தற்போது நெட்டிகன் கடுமையாக கலாய்த்து வருகின்றனர். அது எப்படி 4 நாட்களில் அவர் கொரோனாவிலிருந்து குணமடைவார்? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். பொதுமக்களுக்குத்தான் தனிமைப்படுத்தல் செல்லுமா ? பெரிய நடிகர்களுக்கு இது இல்லையா பாஸ் என்று நெட்டிசன்கள் பங்கமாக ஷாருக்கானை கலாய்த்து வருகின்றனர். ஆனால் இது தொடர்பாக நடிகர் ஷாருக்கான் தரப்பிலிருந்து எந்த விளக்கமும் வெளியாகவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.