மேஜிக்கல் சவுண்ட், இதுவரை கேட்காத ஒரு பரவசம்; ரோஜா படத்துக்கு ரஹ்மான் போட்ட முதல் டியூன் இதுதான்!

ரோஜா படத்தில் சின்ன சின்ன ஆசை பாடல் உருவான விதம் மற்றும் ஏ.ஆர். ரஹ்மானின் பாட்டு திறமை குறித்து பிரமிட் நடராஜன் ஒரு சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார்.

ரோஜா படத்தில் சின்ன சின்ன ஆசை பாடல் உருவான விதம் மற்றும் ஏ.ஆர். ரஹ்மானின் பாட்டு திறமை குறித்து பிரமிட் நடராஜன் ஒரு சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
AR Rahman to refund - Chennai concert

Advertisment

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், 1992-ஆம் ஆண்டு இயக்குநர் மணிரத்னத்தின் 'ரோஜா' திரைப்படத்தின் மூலம் இசையுலகில் அறிமுகமானார். இந்தப் படத்தில் இடம்பெற்ற "சின்ன சின்ன ஆசை" பாடல் இன்றளவும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. இந்தப் பாடல் உருவான விதம் குறித்து, பிரமிட் நடராஜன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துகொண்டார்.

மணிரத்னம் தனது 'ரோஜா' படத்திற்கு இசை அமைக்க இரண்டு இசையமைப்பாளர்களைத் தேர்வு செய்திருந்தார். அவர்களில் ஒருவர் திலீபன். ஒரு நாள், திலீபன் ஏ.ஆர். ரகுமானை தன்னுடன் அழைத்துக்கொண்டு பிரமிட் நடராஜன் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு யாரையும் எதிர்பாராதது போல பிரமிட் நடராஜன் திகைத்துப் பார்த்திருக்கிறார்.

Advertisment
Advertisements

அப்போது திலீபன், "இதோ, இவர்தான் இசையமைக்கப் போகிறார்" என்று கூறியபோது, அங்கு நின்றிருந்த அந்தச் சிறுவன் வேறு யாருமில்லை, அவர்தான் ஏ.ஆர். ரகுமான். அவர் தன்னுடன் ஒரு இசைக் கருவியுடன் வந்து "லால லாலா லாலா" என்று ஒரு மெட்டைப் பாடியுள்ளார். இந்த மெட்டைக் கேட்டதுமே பிரமிட் நடராஜனுக்கு மிகவும் பிடித்துப் போனதாம். உடனடியாக அவர் கே. பாலச்சந்திரனுக்கு போன் செய்து இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

அன்றே மாலை 4 மணிக்கு, பிரமிட் நடராஜன், வைரமுத்து, கே. பாலச்சந்தர், மணிரத்னம் ஆகிய நால்வரையும் அழைத்துள்ளார். அங்கு ஏ.ஆர். ரகுமான் மீண்டும் அதே மெட்டைப் பாடியிருக்கிறார். அதைக் கேட்டதும், கவிஞர் வைரமுத்து உடனே "சின்ன சின்ன ஆசை" என்று பாடலைத் தொடங்கினாராம். இப்படியாகத்தான் ஏ.ஆர். ரகுமானின் இசைப் பயணம் அவரது முதல் படமான 'ரோஜா' மற்றும் அதில் இடம்பெற்ற "சின்ன சின்ன ஆசை" பாடலுடன் ஒரு மறக்க முடியாத தருணத்தில் தொடங்கியது என்று பிரமிட் நடராஜன் விவரித்துள்ளார்.

The ரோஜா கதை ❤ Saregamapa Senior Season 4 | Celebrating AR Rahman Round | Saturday and Sunday at 7pm. #SaregamapaSeniorsSeason4 #SaregamapaS4 #SaregamapaTamil #ZeeTamil #ZeeOnTheGo

Posted by Zee Tamil on Monday, September 30, 2024
Ar Rahman

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: