ரூ. 300 கோடிக்கும் மேல் வசூலித்த பாலிவுட் படமான ஃபைட்டர் படத்தின் ஓ.டி.டி வெளியீட்டு தேதி வெளியிடப்பட்டுள்ளது.
பாலிவுட் ரசிகர்கள் இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்த்த "ஃபைட்டர்" படம் குடியரசு தினத்தன்று வெளியிடப்பட்டது. சித்தார்த் ஆனந்த் இயக்கிய படத்தில் ஹிரித்திக் ரோஷன், தீபிகா படுகோன் மற்றும் அனில் கபூர் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தில் காஷ்மீர் பகுதியின் போர் விமானிகளான ஷம்ஷேர் "பட்டி" பதானியாவாக ஹிரித்திக் ரோஷன் நடித்தார், மினல் "மின்னி" ரத்தோராக தீபிகா படுகோன், மற்றும் குரூப் கேப்டன் ராகேஷ் "ராக்கி" ஜெய்சிங்காக அனில் கபூர் ஆகியோர் நடித்திருந்தனர்.
புலவாமா தாக்குதல் மற்றும் அதற்கு எதிர் தாக்குதல் உள்ளிட்ட நிஜ சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, தேசப்பற்றை உணர்த்தும் விதமாக இந்தப் படத்தின் கதை அமைக்கட்டிருந்தது.
முதலில் ஜனவரி 2023 இல் வெளியிட திட்டமிடப்பட்ட, "ஃபைட்டர்" படம் இறுதியாக ஜனவரி 25, 2024 அன்று திரையரங்குகளில் வெளியானது. உலகளவில் பாராட்டைப் பெற்ற இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.337.2 கோடிக்கு மேல் வசூலித்தது.
வணிக ரீதியாக வெற்றியடைந்தாலும், விமர்சகர்கள் திரைக்கதையில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டினர், வழக்கமான மசாலா கூறுகளுக்கு அப்பால் கதைசொல்லலில் ஆழமாக ஆராயுமாறு இயக்குனர் சித்தார்த் ஆனந்தை வலியுறுத்துகின்றனர்.
இதனிடையே "ஃபைட்டர்" டிஜிட்டல் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமையைப் பெற்றுள்ள நெட்ஃபிளிக்ஸ் இந்தியா மீது அனைவரது பார்வையும் உள்ளது. அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், "ஃபைட்டர்" மார்ச் 21 ஆம் தேதி இரவு 12 மணியளவில் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“