Advertisment

சின்ன வயசுலயே டான்ஸ்ல வெறித்தனமா இருந்த ரித்திக் ரோஷன்! - வைரலாகும் வீடியோ!

ரித்திக் ரோஷனின் நடிப்பில் கடைசியாக வெளியான ’வார்’ திரைப்படம் பல பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்தது.

author-image
WebDesk
Nov 20, 2019 15:05 IST
Hrithik Roshan

Hrithik Roshan

Hrithik Roshan's Childhood Dance Video Goes Viral : நடிகர் ரித்திக் ரோஷன் பாலிவுட்டின் கிரேக்க கடவுள் மட்டுமல்ல, நடனத்தில் ஆர்வமுடைய இளைஞர்களுக்கு பல வழிகளில் உத்வேகமும் அளித்து வருகிறார். இவரது உடலில் இருந்து வெளிப்படும் சில அசுரத் தனமான ‘மூவ்மெண்டுகள்’ அனைவரையும் ஆட வைக்கும்.

Advertisment

ரித்திக் சிறுவயது முதலே நடனமாடுவதில் அதிக ஆர்வம் கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவரது அம்மா பகிர்ந்த வீடியோ இதற்கு சான்று. ரித்திக்கின் அம்மா பிங்கி ரோஷன் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார். சின்ன வயதில் ஒரு திருமணத்தில் ரித்திக்  நடனமாடுவதை அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.

 

View this post on Instagram

 

#onecapturedmoments

A post shared by Pinkie Roshan (@pinkieroshan) on

சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், வெள்ளை நிற பேன்ட், நீல நிற சட்டை அணிந்து ரித்திக் நடனமாடுவதைக் காணலாம். முதலில் வெள்ளை நிற உடையில் பெண் குழந்தை ஆடுவதிலிருந்து தொடங்கும் இந்த வீடியோவில் பின்னர் 10 வயது ரித்திக் இணைந்துக் கொள்கிறார்.

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டதிலிருந்து ரித்திக் ரசிகர்களிடமிருந்து பெரும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. ’ஓ மை காட், ஸோ க்யூட்’ போன்ற கமெண்டுகளை பதிவிட்டிருக்கிறார்கள் ரசிகர்கள். இதற்கிடையே ரித்திக் ரோஷனின் நடிப்பில் கடைசியாக வெளியான ’வார்’ திரைப்படம் பல பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்தது. இந்த படம் 2019 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படமாகும். படத்தின் மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரூ. 317.77 கோடி!

#Bollywood #Hrithik Roshan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment