Hrithik Roshan : கணிதவியலாளர் ஆனந்த்குமாரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ‘சூப்பர் 30’ படத்துடன், பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் தனது ஆண்டைத் தொடங்கினார். இந்தப் படத்தில் மிருணல் தாக்கூர் மற்றும் பங்கஜ் திரிபாதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். தற்போது இந்த படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுவதாக, இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.
19 வருடத்திற்கு முன்பு சச்சினுக்கு சென்னை ரசிகர் கொடுத்த பேட்டிங் டிப்..
பாலிவுட்டில் ஒரு முன்னணி நாளிதழின் அறிக்கையின்படி, ‘சூப்பர் 30’ சர்வதேச அளவில் ஒர்க் அவுட் ஆகும் சிறந்த சப்ஜெக்டாக கருதப்படுகிறது. அதோடு ஹாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் ’சூப்பர் 30’யை தயாரிக்க அதிக ஆர்வம் காட்டுகிறதாம். இதனை எழுத்தாளர் சஞ்சீவ் தத்தா ஆங்கிலத்தில் எழுதுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அந்த அறிக்கையின் படி, கணிதவியலாளர் ஆனந்த்குமாரும் இந்த படத்தின் ஒரு பகுதியாக இடம்பெறுவார் என்று சில நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மற்றொரு அறிக்கையோ அமெரிக்காவிலுள்ள தயாரிப்பு நிறுவனத்தின் உயர் அதிகாரிகளின் சூப்பர் 30 படத்தின் தயாரிப்பாளர்களை சந்தித்ததாக கூறுகிறது. இந்த படத்தின் ஹாலிவுட் ரீமேக்கின் வாய்ப்புகள் குறித்து அவர்கள் விவாதித்ததாகவும் கூறப்படுகிறது. சமூகத்தை வலுப்படுத்த ஆசிரியர்களின் பங்கினை எடுத்துக் கூறிய ‘சூப்பர் 30’ படத்தை நதியாட்வாலா கிராண்ட்சன் என்டர்டெயின்மென்ட், பாண்டம் பிலிம்ஸ் & ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்திருந்தது. இதை இயக்குநர் விகாஸ் பஹ்ல் இயக்கியிருந்தார்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Hrithik roshan super 30 hollywood remake
வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு கேட்ட ராமதாஸ் எப்படி 10.5% ஒப்புக்கொண்டார்? – திருமாவளவன் கேள்வி
ராகுல் காந்தி, அமித் ஷா இன்று தேர்தல் பிரச்சாரம் : முழு விவரம் உள்ளே
அனைத்து துறைகளிலும் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு: சென்னை பல்கலைக்கழகம் முடிவு
தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ளாதது வருத்தம் – மான் கி பாத் நிகழ்ச்சி பிரதமர் மோடி உரை
மு.க.ஸ்டாலின் விருப்ப மனு தாக்கல்; மீண்டும் கொளத்தூர் தொகுதியை தேர்வு செய்தது ஏன்?