வேதா கதாபாத்திரத்தில் இவரா? விஜய் சேதுபதி ரேஞ்சுக்கு இருப்பாரா?

இந்த திரைப்படத்தில் தீபிகா படுகோன் நடிகையாக நடிக்க உள்ளார்.

Hrithik Roshan to begin shooting for Vikram Vedha remake in June, here are details of his role

வித்தியாசமான திரைக்கதைகளுக்கு என்றுமே மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும். அந்த திரைப்படத்தில் நமக்கு பிடித்த நட்சத்திரங்கள் நடித்திருந்தால் சொல்லவே வேண்டாம். 2017ஆம் ஆண்டு அப்படி வெளியாகி மக்களிடம் மிக நல்ல மதிப்பை பெற்ற திரைப்படம் தான் விக்ரம் வேதா.

மாதவன், விஜய் சேதுபதி, ஷ்ரத்தா, கதிர், வரலட்சுமி சரத்குமார் போன்ற நட்சத்திரங்கள் நடித்த அந்த படத்தில் நிமிடத்திற்கு நிமிடம் ஒரே பரபரப்பு தான். தற்போது அந்த படத்தை இந்தியில் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிகர் ஹ்ரிதிக் ரோஷன் நடிக்க உள்ளார். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நிறைய திரைப்படங்கள் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகிக் கொண்டிருக்கிறன. அவரின் நடிப்பை ஈடு செய்யும் அளவிற்கு ஹ்ரிதிக் நடிப்பாரா என்று அவரின் ரசிகர்கள் பேசிக் கொள்வது நமக்கும் கேட்கத்தான் செய்கிறது. இந்த கதாபாத்திரத்திற்கு தேவையான பல முக்கிய உடல் மாற்றங்களை ஹ்ரித்திக் மேற்கொண்டு வருகிறார்.

மாதவன் கதாபாத்திரத்தில் செயிஃப் அலி கானும், கதாநாயகியாக தீபிகா படுகோனும் நடிக்க உள்ளனர். வார் திரைப்படத்திற்கு பிறகு நீண்ட காலத்திற்கு பிறகு திரையில் தோன்ற உள்ளார் ஹ்ரிதிக் ரோஷன். இந்த திரைப்படத்திற்கான படபிடிப்பு வருகின்ற ஜூன் மாதம் நடைபெற உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Hrithik roshan to begin shooting for vikram vedha remake in june

Next Story
செக் மோசடி: ராதிகாவுக்கு பிடிவாரண்ட், சரத்குமார் தண்டனை நிறுத்திவைப்பு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com