தல ரசிகர்களுக்கு காத்திருந்த செம்ம சர்பிரைஸ்! தெறிக்க விடலாமா?

‘என்னை அறிந்தால்’ படத்தில் தல அஜித்தின் மகளாக நடித்த அனிகா, தற்போது விசுவாசம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் எனக் கூறப்பட்டுள்ளது.

கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வெற்றி நடைபோட்ட திரைப்படம் என்னை அறிந்தால். இப்படத்தில் திரிஷாவின் மகளாக நடித்திருந்தவர் பேபி அனிகா. படம் முழுவதும் அஜித்துடனே வரும்படியான மகள் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார்.

இந்நிலையில், சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் நான்காவது திரைப்படமான விசுவாசத்திலும், அனிகா நடிப்பது தெரியவந்துள்ளது. இப்படத்திலும் அவர் அஜித்தின் மகளாக நடிப்பதாக கூறப்படுகிறது. விசுவாசம் படத்தில் அஜித் அப்பா மகன் என இரு வேடங்களில் நடிக்கிறார். எனவே அப்பா அஜித்துக்கு மகளாகிறாரா, இல்லை மகன் அஜித்துக்கு மகளாகிறாரா என்பது தெரியவில்லை.

ஏற்கனவே என்னை அரிந்தால் படத்தில் அனிகாவின் நடிப்பாலும், அஜித்தின் அப்பா மகள் காம்பினேஷனாலும் மக்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்தது. தற்போது 2வது முறையாக அஜித்துக்கு அனிகா மகளாகிறாள் என்ற செய்தி தல ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

×Close
×Close