எனக்கு இங்கிலீஷ் தெரியாது, ஹீரோயின் அம்சம் இல்ல; பா.ஜ.க எம்.பி பற்றி பேசிய லப்பர் பந்து நடிகை!

தனக்கு இன்னும் ஆங்கிலத்தில் பேசுவதில் சிரமம் உள்ளதாக ‘லப்பர் பந்து’ நடிகை தெரிவித்துள்ளார்.

தனக்கு இன்னும் ஆங்கிலத்தில் பேசுவதில் சிரமம் உள்ளதாக ‘லப்பர் பந்து’ நடிகை தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
lubber

எனக்கு இங்கிலீஷ் தெரியாது, ஹீரோயின் அம்சம் இல்ல; பா.ஜ.க எம்.பி பற்றி பேசிய லப்பர் பந்து நடிகை!

மலையாள திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சுவாசிகா. தொலைக்காட்சி தொடர்கள் மூலம் திரைத்துறையில் அறிமுகமான சுவாசிகா தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

Advertisment

எந்தவிதமான கதாபாத்திரமாக இருந்தாலும் அதனுடன் ஒன்றிப்போய் இயல்பாக நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் நடிகை சுவாசிகாவிற்கு வரவேற்பு கிடைத்தது. இவர் தமிழில் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படத்தில் அட்டக்கத்தி தினேஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.

கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவான இந்த படத்தில் சுவாசிகாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. கோவத்தில் தன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டு பின்பு கணவரை பார்த்ததும் தன் வீட்டிற்கு வரும் காட்சியெல்லாம் நம் வீட்டில் நடக்கும் காட்சிகளை போன்று பிரதிபலித்தது.

இப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகை சுவாசிகா, நடிகர் சூரி நடிப்பில் வெளியான ‘மாமன்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் சூரியின் அக்கா கதாபாத்திரத்தில் நடித்திருந்த சுவாசிகா தன் தம்பியின் மீது உள்ள அளவுக்கடந்த பாசத்தை மிகவும் அழகாக வெளிப்படுத்தியிருப்பார்.

Advertisment
Advertisements

குழந்தை இல்லை என்று வருத்தப்படும் காட்சிகளிலும் தன் தம்பியை அக்கறையுடன் பார்த்துக் கொள்ளும் காட்சிகளிலும் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருப்பார். இவர் தற்போது நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘கருப்பு’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நடிகை சுவாசிகா 2024-ஆம் ஆண்டு பிரேம் ஜேக்கப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகும் தனது நடிப்பு பயணத்தை நிறுத்தாமல் தொடர்ந்து வருகிறார். இந்நிலையில், நடிகை சுவாசிகா தனக்கு ஆங்கிலத்தில் பேசுவதில் சிரமம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் 9-ம் வகுப்பில் இருந்து நடித்து வருகிறேன். சினிமாவை தவிர வேறு எதுவும் எனக்கு தெரியாது. தொலைதூர கல்வி மூலம் பிளஸ்-2 படிப்பை முடித்தேன். தொடர்ந்து நடனத்தில் டிப்ளமோ முடித்தேன்.

எனக்கு இன்னும் ஆங்கிலத்தில் பேசுவதில் சிரமம் உள்ளது. கலைஞர்களுக்கு மொழி ஒரு பொருட்டல்ல. விஜய் சேதுபதி, கங்கனா ரணாவத் நினைவு எனக்கு வருகிறது. கங்கனா முதலில் இந்தியில் மட்டுமே பேசுவார். பின்னர் ஆங்கிலத்தில் பேச தொடங்கினார். 

நானும் மெதுவாக ஆங்கிலத்தை கற்றுக் கொள்வேன். மூத்த நடிகர் ஒருவர் கதாநாயகிக்கு தேவையான அம்சங்கள் என்னிடம் இல்லை. எனக்கு முகப்பரு இருப்பதாக கூறினார். நான் இந்த முகப்பரு, வறண்ட சருமம் இந்த மூக்குடன் தான் நடித்தேன்” என்றார்.

Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: