சரோஜா தேவி கடைசி நிகழ்ச்சியில் அவருக்கு அவார்டு கொடுத்தேன்; அவர் பேசிய கடைசி வார்த்தை: நடிகை வடிவுக்கரசி சொன்னது!
சமீபத்தில் பிகைண்ட் டாக்கீஸ் என்ற யூடியூப் சேனல் நடத்திய நேர்காணலில், தனது வாழ்க்கை, திரைப் பயணம், மற்றும் சக நடிகர்கள் குறித்த தனது அனுபவங்களை நடிகை வடிவுக்கரசி வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டார்.
சமீபத்தில் பிகைண்ட் டாக்கீஸ் என்ற யூடியூப் சேனல் நடத்திய நேர்காணலில், தனது வாழ்க்கை, திரைப் பயணம், மற்றும் சக நடிகர்கள் குறித்த தனது அனுபவங்களை நடிகை வடிவுக்கரசி வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டார்.
சரோஜா தேவி கடைசி நிகழ்ச்சியில் அவருக்கு அவார்டு கொடுத்தேன்; அவர் பேசிய கடைசி வார்த்தை: நடிகை வடிவுக்கரசி சொன்னது!
திரைத்துறையில் பல தசாப்தங்களாகத் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் நடிகை வடிவுக்கரசி. சமீபத்தில் பிகைண்ட் டாக்கீஸ் என்ற யூடியூப் சேனல் நடத்திய நேர்காணலில், தனது வாழ்க்கை, திரைப் பயணம், மற்றும் சக நடிகர்கள் குறித்த தனது அனுபவங்களை அவர் வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டார்.
Advertisment
தான் நடிகை சரோஜாதேவியை நேரில் சந்தித்த அனுபவம் குறித்து வடிவுக்கரசி பேசினார். "சரோஜாதேவியின் நடிப்பை நான் பல படங்களில் ரசித்திருக்கிறேன், குறிப்பாக அவரது கொஞ்சும் பேச்சும் எனக்கு மிகவும் பிடிக்கும்" என்று கூறினார். ஒரு விருது விழாவில் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்க தனக்குக் கிடைத்த வாய்ப்பு ஒரு பெரிய கௌரவம் என்று அவர் நெகிழ்ந்தார். அப்போது, தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டபோது, யேய் உன்ன எனக்கு தெரியும், நீ முதல் மரியாதை படத்தில சிவாஜி சாரோட நடிச்சிருக்க, "ரோஜா" சீரியலை விரும்பிப் பார்த்தேன், அது நிறுத்திட்டாங்க” என்று கூறி சரோஜா தேவி தன்னை ஆச்சரியப்படுத்தியதாக வடிவுக்கரசி கூறினார்.
சரோஜாதேவியின் நடிப்பு குறித்துப் பேசிய வடிவுக்கரசி, சிவாஜி கணேசனுடன் அவர் இணைந்து நடித்த "பாலம் பழமும்", "பார்த்தால் பசிக்கும்" போன்ற படங்களில் அவரது நடிப்புத் திறமையை மிகவும் ரசித்ததாகக் கூறினார். ஆனால், எம்.ஜி.ஆருடன் நடித்த பல படங்களில் அவர் ஒரு "அழகான பொம்மை" போலவே காட்சிப்படுத்தப்பட்டதாகத் தனது கருத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும், கே. பாலசந்தரின் "குலவிளக்கு" திரைப்படம் சரோஜாதேவியின் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய படங்களில் ஒன்று என்றும், அந்தப் படத்தில் அவரது நடிப்பு பலரையும் அழ வைத்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிவாஜி கணேசன் பற்றிப் பேசுகையில், அவருடன் நடித்ததை மிகப்பெரிய பாக்கியமாகக் கருதுவதாக வடிவுக்கரசி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தான் சிவாஜி நடிக்கத் தொடங்கிய காலத்தில் பிறக்கவில்லை என்றாலும், பாரதிராஜா இயக்கிய "முதல் மரியாதை" படத்தில் அவருடன் நடிக்கக் கிடைத்த வாய்ப்பை அவர் நன்றியுடன் நினைவுகூர்ந்தார். மேலும், "வாழ்க்கை" படத்தில் அவரது மகளாகவும், "சந்திப்பு" படத்தில் அவரது அத்தையாகவும் நடித்த அனுபவங்களையும் அவர் பகிர்ந்து கொண்டார். அப்போது சிவாஜியின் புகழை முழுமையாக உணரவில்லை என்றாலும், இன்று அந்த நினைவுகள் பொக்கிஷம் போன்றது என்றார்.
Advertisment
Advertisements
"விஜயகாந்த் என் கடவுள், என் வாழ்க்கையே அவர்தான்" என்று உருக்கமாகத் தெரிவித்தார். விஜயகாந்த் சிறந்த மனிதர் என்றும், காட்சிகளில் சாப்பிடும்போதுகூட அவர் இயல்பாகச் சாப்பிடுவார் என்றும் நினைவு கூர்ந்தார். அவர், இப்போது இருந்திருந்தால் இன்னும் பல விஷயங்கள் சிறப்பாக இருந்திருக்கும் என்றும் வடிவுக்கரசி கூறினார்.