இதுவரை 10 பெண்களுடன் உறவு: 'திமிரு' நடிகர் விநாயகன் திமிரான பேச்சு!

மீடூ புகார் தொடர்பாக நடிகர் விநாயகன் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு நடிகை பார்வதி பதிலடி கொடுத்துள்ளார். பார்வதி’ விநாயகனின் படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, அவரது பத்திரிகையாளர் சந்திப்பை ’அவமானம்’ என்று குறிப்பிட்டார்.

மீடூ புகார் தொடர்பாக நடிகர் விநாயகன் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு நடிகை பார்வதி பதிலடி கொடுத்துள்ளார். பார்வதி’ விநாயகனின் படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, அவரது பத்திரிகையாளர் சந்திப்பை ’அவமானம்’ என்று குறிப்பிட்டார்.

author-image
WebDesk
New Update
vinayakan

I had physical relationships with at least ten women says Actor Vinayakan

பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, ​​விநாயகன் பத்து பெண்களுடன் உடலுறவு கொண்டதாகவும், மீண்டும் அவர்களை தன்னுடன் உடலுறவு கொள்ளும்படி கேட்பதாகவும் கூறியிருந்தார்.

Advertisment

‘நான் சர்ச்சைக்கு தயாராக இருக்கிறேன். மீடூ என்றால் என்ன? எனக்குத் தெரியாது அதனால்தான் உங்களிடம் (ஊடகங்களை நோக்கி) கேட்டேன். நான் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ள விரும்புகிறேன், அவளிடம் என்ன சொல்ல வேண்டும்.

முதலில் உங்கள் மனைவியுடன் தான் உடலுறவு கொண்டீர்களா? எல்லோரும் அப்படி இல்லை. ஒரு பெண்ணுடன் எப்படி உடலுறவு கொள்கிறீர்கள்? அந்த பொண்ணை எப்படி உன் பக்கம் கூப்பிடறது சொல்லு? என் வாழ்க்கையில் நான் குறைந்தது பத்து பெண்களுடன் உடல் ரீதியான உறவுகளை வைத்திருக்கிறேன்.

பத்து பெண்களை என்னுடன் உடலுறவு கொள்ளச் சொன்னேன். நீங்கள் சொல்லும் மீடூ இதுதானா என்று மீண்டும் கேட்கிறேன். அந்தப் பெண்ணுடன் மீண்டும் உடலுறவு கொள்ள நினைத்தால் அவளிடம் கேட்பேன்.

Advertisment
Advertisements

எந்த பெண்ணும் என்னிடம் வந்து, ஒரு பெண்ணின் விளக்கம் என்ன தெரியுமா? என்று கேட்டதில்லை.

விநாயகனின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  நடிகர் ஹரிஷ் பெராடி, குஞ்சிலா மாசில்லாமணி, ஷரதாக்குட்டி, ஷானிமோல் உஸ்மான் உள்ளிட்டோர் விநாயகனை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

முன்னதாக, முன்னாள் மாடல் அழகி மற்றும் தலித் ஆர்வலர் ஒருவர் விநாயகன் மீது மீடூ குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். விநாயகன் தனக்கு போன் மூலம் பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Cinema Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: