scorecardresearch

ஸ்ரீதேவி மகளுக்கு இவ்வளவு கஷ்டமா?

நான் ஜிம்முக்கு வரும்போது அணிந்திருக்கும் உடை பற்றி விமர்சிக்க, இவர்களுக்கு என்ன உரிமை உள்ளது?

Janhvi Kapoor
Janhvi Kapoor

தமிழ் சினிமாவில் 80-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி.

பொதுவாக நடிகைகளுக்கு ஆண் ரசிகர் வட்டம் பெரிதாக இருக்கும். ஆனால் ஸ்ரீதேவிக்கு பெண்களிடத்திலும் அமோக வரவேற்பு கிடைத்தது.

பின்னர் கோலிவுட்டிலிருந்து பாலிவுட்டுக்குப் பறந்த அவர், அங்கும் வெற்றிக் கொடி நாட்டினார். பிறகு சொந்த ஊர் திரும்பாமல், தயாரிப்பாளர் போனி கபூரை மணந்துக் கொண்டு அங்கேயே செட்டில் ஆனார்.

இன்று பல இளம் நடிகைகளுக்கு அவர் இன்ஸ்பிரேஷனாக உள்ளார்.

ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர், கடந்த வருடம் வெளியான ‘தடாக்’ படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். சைரட் படத்தின் ரீமேக்கான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

தற்போது இவர் ’கார்கில் கேர்ள்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஜான்வி பங்கேற்றார்.

அப்போது, நீங்கள் உடுத்திய துணியை மீண்டும் உடுத்துவதால் கேலிக்குள்ளாக்கப் படுகிறீர்களே என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு, “தினம் ஒரு புதுத்துணி உடுத்தும் அளவுக்கு நான் இன்னும் சம்பாதிக்கவில்லை. எனது நடிப்பு பற்றி விமர்சித்தால், அதனை கவனத்தில் எடுத்துக் கொள்வேன். ஆனால் நான் ஜிம்முக்கு வரும்போது அணிந்திருக்கும் உடை பற்றி விமர்சிக்க, இவர்களுக்கு என்ன உரிமை உள்ளது?” எனக் கேட்டுள்ளார்.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: I havent earned much money janhvi kapoor