/tamil-ie/media/media_files/uploads/2023/06/roja.jpg)
1990 கால கட்டங்களில் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கிலும் நடிகை ரோஜா கொடிகட்டி பறந்தவர். தெலுங்கு படங்களின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை ரோஜா, ஆர்கே செல்வமணி இயக்கத்தில் வெளியான 'செம்பருத்தி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து ரஜினிகாந்த் முதல் பிரபு என பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு என தனி ரசிகர் பட்டாளத்தையே நடிகை ரோஜா வைத்துள்ளார்.
நடிகை ரோஜா தற்போது சினிமாவையும் தாண்டி அரசியலிலும் ஈடுபட்டுள்ளார். இவர் இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். தற்போது இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
இந்த நிலையில் இயக்குனர் ஆர்.கே.செல்வமணியும் ரோஜாவும் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது நடிகை ரோஜா 24 குழந்தைகளை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டதாக கூறினார். அந்த பேட்டியில் அவர்கள் நிறைய விஷயங்களை பேசிய நிலையில் அது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில் குறிப்பாக,"நானும் எனது கணவரும் காதலித்த நேரத்தில் 24 குழந்தைகள் பெற்றெடுக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். அந்த குழந்தைகளை உலக நாடுகள் போற்றும் வகையில், வளர்க்க வேண்டும் என்று ஆசை இருந்தது.
ஆனால், அப்போது எனக்கு குழந்தை பிறக்காது என்று மருத்துவர் சொன்னதால் என் மனதே உடைந்து விட்டது. பின். கடவுள் எனக்கு இரண்டு குழந்தைகளை பரிசாக கொடுத்தார். நம்மளை மீறி ஒரு சக்தி இருப்பதை அப்போது தான் உணர்ந்தோம்" என்று தெரிவித்துள்ளனர்.
இந்த பேட்டியில் நடிகை ரோஜா 24 குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என்று நினைத்தது ஆச்சரியப்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.