/indian-express-tamil/media/media_files/2025/07/28/rihana-2025-07-28-11-58-11.jpg)
பிரபல சீரியல் நடிகை ரிஹானா, தான் பணம் சம்பாதிக்கும் ஆசையில் ஒரு தொழிலில் இறங்கி, எப்படி ஒரு பெரிய ஏமாற்று வேலையில் சிக்கிக்கொண்டார் என்பதைப் பற்றி ஏற்றோரூட்ஸ் யூடியூப் பக்கத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் பரவி வரும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தன் கணவர் என்பது, தனது இரண்டு குழந்தைகளின் தந்தை மட்டுமே என்றும், தான் ஒரு விவாகரத்து பெற்ற பெண் என்றும், தான் ஒரே ஒரு முறைதான் திருமணம் செய்ததாகவும், அதுவும் விவாகரத்தில் முடிந்ததாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
தனக்கு தாலி கட்டி ஏமாற்றப்பட்டதாகவும், மேலும் ராஜ்கண்ணன் தன்னிடமிருந்தே தனது அன்றாடச் செலவுகளுக்குப் பணம் பெற்று மோசடி செய்ததாகவும் ரிஹானா பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து அவர் மகளிர் ஆணையம் மற்றும் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இப்படியாக இவரது திருமணம் தனிப்பட்ட வாழ்க்கை என சர்ச்சைகள் கிளம்பிவரும் நிலையில் தான் பணம் சம்பாதிக்கும் நோக்கில் பிசினஸ் ஒன்றில் சிக்கி எப்படி ஏமாற்றப்பட்டேன் என்பது குறித்து ரிஹானா விளக்கி கூறியுள்ளார்.
பைல்வான் ராஜ்கண்ணன் மற்றும் அவனது நண்பன் சதீஷ் ரிஹானாவை பெசன்ட் நகர் பீச்சில் சந்தித்து, தொழில் வாய்ப்புகள் குறித்துப் பேசியிருக்கிறார்கள். "நான் கருப்பட்டி பிசினஸ் ஓபன் பண்ணணும்னு பிளானா இருக்குன்னு சொன்னேன். அதுக்கு, 'அதுல இவ்வளோல்லாம் வராதுங்க. இது லிக்கர்ல போட்டோம்னா கிளப் ஓபன் பண்ணோம்னா, ரெஸ்டோபார் ஓபன் பண்ணோம்னா சூப்பரா வருமானம் வரும். இதுலவிட 10 மடங்கு சம்பாதிக்கலாம். டீ காப்பி ஆத்திட்டு நிக்கிறவா நீங்க, இவ்ளோ கஷ்டப்பட்டீங்க' அப்படின்னு சொல்லி என்ன பிரைன் வாஷ் பண்ணானுங்க ரெண்டு பேரும்," என்கிறார் ரிஹானா.
"நான் அடுத்தவங்க காசுல நான் ஆசைப்படலையே. என் பணத்தை நான் இன்வெஸ்ட் பண்றேன். நான் ஆசைப்படுறேன். அவனோட காசுல நான் ஆசைப்பட்டாதான பேசலாம். சோ, நம்ம ஆசைப்படலாம். ஆனா பேராசைப்பட்டுட்டேன் அந்த இடத்துல. அதுக்கு பலன்தான் இன்னைக்கு உட்கார்ந்து நான் இவ்ளோ ஆதாரங்கள் எடுத்துக்கிட்டு, கோர்ட்டும், இது போலீஸ் ஸ்டேஷன், மகளிர் ஆணயம், அங்கும் இங்கும் சுத்திட்டு இருக்கேன். காரணமே அந்த பேராசைதான்னு இன்னைக்கு எனக்கு புரிய வச்சது," என்று தனது தவறை ஒப்புக்கொள்கிறார் ரிஹானா.
"அந்த பணத்தை நான் அந்த கருப்பட்டியில போட்டிருந்தா கூட நிம்மதியா, கொஞ்சமா வருமானம் இருந்தாலும் நல்லா சம்பாதிச்சிருக்கலாம். இந்த மாதிரி ஒரு பொறுக்கித்தனம் பண்றவங்க, இந்த மாதிரி ஆட்கள் கிட்ட நம்பி நம்ம இறங்குனோம் பார்த்தீங்களா? இப்படி இறங்குனவங்களுக்கு இப்படித்தான் ஆகும்ன்ற உதாரணமே நான்தான்," என்று தனது அனுபவத்தைப் பாடமாகப் பகிர்ந்துகொள்கிறார். ரிஹானாவுக்கு குறுகிய காலத்தில் லாபம் ஈட்ட வேண்டும் என்ற ஆசையை பைல்வான் ராஜ்கண்ணன் மற்று அவரது நண்பர் சதீஷ் காட்டியதால்தான் தனக்கு இந்த நிலை என்றும் ரிஹானா கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.