scorecardresearch

ராணாவையும் திரிஷாவையும் சேர்த்து வைப்பேன் : பிரபாஸ் புதிய சபதம்

நடிகர் ராணா டக்குபதி மற்றும் நடிகை திரிஷாவையும் நான் சேர்த்து வைப்பேன் என தெலுங்கு பிரபல நடிகர் பிரபாஸ் ஒரு பேட்டியில் தெரிவித்தது வைரலானது. நடிகர் ராணா, சமீபத்தில் கலந்து கொண்ட பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தான் த்ரிஷாவை கொஞ்ச காலம் காதலித்ததாக உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் நடிகர் ராணா. இவர் த்ரிஷாவை காதலித்து வருவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகின. ஆனால் இந்த தகவலை ராணா மறுத்தார். நடிகர் பிரபாஸ் […]

prabhas, நடிகர் பிரபாஸ்
prabhas, நடிகர் பிரபாஸ்
நடிகர் ராணா டக்குபதி மற்றும் நடிகை திரிஷாவையும் நான் சேர்த்து வைப்பேன் என தெலுங்கு பிரபல நடிகர் பிரபாஸ் ஒரு பேட்டியில் தெரிவித்தது வைரலானது.

நடிகர் ராணா, சமீபத்தில் கலந்து கொண்ட பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தான் த்ரிஷாவை கொஞ்ச காலம் காதலித்ததாக உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் நடிகர் ராணா. இவர் த்ரிஷாவை காதலித்து வருவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகின. ஆனால் இந்த தகவலை ராணா மறுத்தார்.

நடிகர் பிரபாஸ் பேட்டி:

இந்நிலையில், கரண் ஜோஹர் நடத்தும் ‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் இயக்குநர் ராஜமெளலி, பிரபாஸ் மற்றும் ரானா ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பல கேள்விகளுக்கு மூவரும் உற்சாகமாகப் பதிலளித்தனர்.

இந்நிகழ்ச்சியில் ராணாவிடம் த்ரிஷாவுடனான காதல் குறித்து கேள்வி எழுப்பினார் கரண் . அதற்கு “10 ஆண்டுகளுக்கு மேலமாக த்ரிஷா நல்ல தோழியாக இருந்தார். இடையே சில காலம் அவரைக் காதலித்தும் வந்தேன். பின்னர் சரிப்பட்டு வராத காரணத்தால் காதலை முறித்துக் கொண்டேன்” என்று பதிலளித்தார்.

ராணாவின் இப்பதிலுக்கு பிரபாஸ் கிண்டலாக, “இருவரையும் நான் சேர்த்து வைப்பேன்” என்று தெரிவித்தார்.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: I will reunite rana daggubati and trisha says actor prabhas