/tamil-ie/media/media_files/uploads/2018/05/yashika-2.jpg)
yashika
ஊரே கலவரத்தில் இருந்தாலும், பிக் பாஸ்க்கு குதுகலம் இல்லாமலா போகும். பிக் பாஸ்-னு சொன்னா தமிழ்நாட்டுல தெரியாத ஆளே இல்லை. பிக் பாஸ் சீசன் 1-ல் ஓவியாக்காகவே தினமும் டிவி பார்த்தவங்க ஏராளம். ஜூலி, ஓவியா, காயத்ரி, ஸ்னேகன், பரணி மற்றும் ஆரவ் என இவர்களுக்காக தனி ஆடியன்ஸ் இருந்து வந்தது. இந்த வருஷத்தின் பிக் பாஸிலும் ஜூலி, காயத்ரி மற்றும் ஓவியா மாதிரியான ஆட்களை நாம நிச்சயம் பார்க்கத்தான் போறோம்.
போன வருஷம், மக்களின் தேவதையாக ஓவியாவை டிவி மூலம் உங்கள் மனதில் இறங்கினவங்க, இந்த வருஷமும் அதே போல ஒரு நடிகைய இறக்குறாங்க. யாருனு தெரிஞ்சிக்க உடனே ஆர்வமா இருக்குமே? இந்த வருஷம் வெளியான 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தை தியேட்டர் சென்று பார்த்தவங்களா நீங்க? அப்போ உங்களுக்கு பிடிச்சவங்க தான் பிக் பாஸ் 2ல் கலந்துக்க போறாங்கனு தகவல் வெளியாகியிருக்கு.
ஆமாங்க, IAMK படத்தில் நடித்த யாஷிகா இந்த வருஷத்தின் பிக் பாஸ் தமிழ் 2ல் கலந்துக்க போறாங்க என்ற செய்தி வெளியாகியிருக்கு. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னாடியே மூக்குத்தி காமெடி மூலம் பிரபலமானவர் இவர்.
— Yashika Aannand (@iamyashikaanand) 16 May 2018
யாஷிகாவும் ஓவியாவை போலவே ரொம்ப வெளிப்படையா பேசுரவங்க, பழகுரவங்க. அதனால் இந்த சீசன் 2ல் இவர் கலந்துக் கொண்டா நல்லா இருக்கும் என அந்த டிவி சேனல் குழு நினைச்சிருக்காங்க. இதுக்காக யாஷிகாவை தொடர்பு கொண்டு பேசியிருந்தாங்க-னு நம்ம உளவுத்துறை சொல்றாங்க.
முதல் படம் வெளியான வருஷமே யாஷிகாவுக்கு அதிக அளவில் ரசிகர்கள் பட்டாளம் குவிஞ்சிருக்கு. இப்போ இவங்க பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக்குட்டா என்ன ஆகும்? நல்ல பெயர் கிடைக்கலாம் இல்ல விமர்சனங்களும் வரலாம்.
யாஷிகா பிக் பாஸ் 2க்கு வர்றாங்க-னு என்னதான் நம்ம உளவுத்துறை சொன்னாலும், இதை இன்னும் அதிகாரப்பூர்வமா உறுதி செய்யவில்லை. எனவே இவங்க நிச்சயம் பங்கேற்பாங்களா என்று இந்த சீசன் முதல் எபிசோட் வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.