Idli Kadai Movie Review Updates: 'நடிப்பு அசுரன்' என்பதை மீண்டும் நிரூபித்த தனுஷ்- X ரிவ்யூ

Idli Kadai Movie Review and Rating Live Updates in Tamil: தனுஷ் இயக்கி நடித்திருக்கும் இட்லி கடை படத்தின் விமர்சனம் தொடர்பாக உடனுக்குடன் அறிய தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

Idli Kadai Movie Review and Rating Live Updates in Tamil: தனுஷ் இயக்கி நடித்திருக்கும் இட்லி கடை படத்தின் விமர்சனம் தொடர்பாக உடனுக்குடன் அறிய தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
arun

Idli Kadai Movie Review Updates: தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இயக்குனராகவும் கலக்கி வரும் அவரின் இயக்கத்தில் ‘இட்லி கடை’ உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம், எம்மாதிரியான கதைக்களத்துடன் இருக்கும் என மக்களிடம் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ‘யு’ தணிக்கை சான்றிதழ் பெற்றுள்ள இத்திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.  

Advertisment
  • Oct 01, 2025 16:05 IST

    காட் மோடில் தனுஷ்: செம எமோஷனல்

    இயக்குநர் தனுஷ் ஒரு எழுத்தாளராகவும், இயக்குநராகவும் உண்மையிலேயே கடவுள் மோடில் (God Mode) இருக்கிறார். தமிழ் மக்களின் மனதைத் தொட்டுவிட்டார்!

    கதைக்களம் "செம எமோஷனலாக" நெஞ்சில் வந்து அமர்ந்துவிட்டது. நடிகர் அருண் விஜய் ஒரு ஒரிஜினல் கேங்ஸ்டர் ஆர்டிஸ்ட் என்பதை மீண்டும் நிரூபிக்கிறார்.

    ஜிவி பற்றி சொல்லவா வேண்டும்? மியூசிக்கில் நம்மை அடித்துக் கொல்கிறார்! கண்கலங்க வைக்கிறார். முதல் பாதியிலேயே பல இடங்களில் எமோஷனலாகிவிட்டோம்.



  • Oct 01, 2025 15:36 IST

    தனுஷ்: ஆக்டிங் பவர்ஹவுஸ்

    இட்லிகடை விமர்சனம் [4/5]: நெகிழ வைக்கும் ஒரு குடும்பத் திருவிழா!

    இயக்குநர் தனுஷ் மீண்டும் ஒருமுறை மனதைக் கவரும், அழகான குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படத்தைக் கொடுத்திருக்கிறார்.

    படம் மிகவும் ரசிக்கும்படியாகவும், யதார்த்தமாகவும்  இருக்கிறது. ஒவ்வொரு காட்சியும் பார்வையாளர்களுடன் மிக ஆழமாகப் பிணைந்து கொள்கிறது. நடிகர் தனுஷ் ஒரு நடிப்பு அசுரன் (Acting Powerhouse) என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். அது உணர்ச்சிமயமான காட்சிகளாக இருந்தாலும் சரி, அல்லது நகைச்சுவைக் காட்சிகளாக இருந்தாலும் சரி, அவர் எல்லாவற்றிலும் பிரமாதப்படுத்துகிறார். அவரது நடிப்பு தனித்து நிற்கிறது!



  • Advertisment
    Advertisements
  • Oct 01, 2025 15:33 IST

    நீ ஜெயிச்சுட்ட முருகன்

    Video: Shruthi TV



  • Oct 01, 2025 14:29 IST

    இட்லி கடை அருமையான ஃபீல் குட் படம்

    இட்லி கடை அருமையான ஃபீல் குட் படம். தனுஷ், அருண் விஜய், நித்யா மேனன் என அனைவரும் நடிப்பில் ஜொலிக்கின்றனர். ராஜ்கிரணின் கதாபாத்திரம் அருமை. பிஜிஎம் நன்றாக இருந்தது. நல்ல ரைட்டிங் உடன் கூடிய சிம்பிளான படம். கிராமத்து வாழ்க்கையை நினைவுக்கு கொண்டு வரும். சில இடங்களில் எமோஷனலாகவும் உள்ளது. சில இடங்களில் தொய்வு இருந்தாலும் சில காட்சிகள் அருமையாக எழுதப்பட்டு உள்ளன. ஒர்த் ஆன படம் என குறிப்பிட்டுள்ளார்.

     



  • Oct 01, 2025 14:11 IST

    இட்லி கடை முதல் பாதி அருமை - ட்விட்டர் விமர்சனம்

    இட்லி கடை முதல் பாதி அருமை. தனுஷ் மற்றும் அருண் விஜய்யின் கதாபாத்திரங்கள் ஃபாரின் பின்னணியில் இருந்து தொடங்குகிறது. நித்யா மேனன் கேரக்டர் ரசிக்கும்படியும், கலகலப்பானதாகவும் உள்ளது.  ஒரு பக்காவான ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படம் உள்ளது. குறிப்பாக சி செண்டர் ஆடியன்ஸுக்கு இப்படம் நன்றாக கனெக்ட் ஆகும். சிம்பிளான கதை மற்றும் திரைக்கதை. ஆனால் இயக்குனர் தனுஷ் அதை எமோஷன், ஃபன், லவ், ஆக்‌ஷன் உடன் பிரமாதமாக கொடுத்திருக்கிறார்.



  • Oct 01, 2025 14:10 IST

    படம் நன்றாக கனெக்ட் ஆனது - ட்விட்டர் விமர்சனம்

    இட்லி கடை படத்தின் முதல் பாதி எமோஷனல் காட்சிகளாலும், விறுவிறுப்பான திரைக்கதையாலும் நிரம்பி உள்ளது. அருண் விஜய் - தனுஷ் இடையேயான மோதல் உடன் இண்டர்வெல் காட்சி முடிகிறது. படம் நன்றாக கனெக்ட் ஆனது. குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் கழுகு காட்சி புல்லரிக்க வைத்தது. முழு படமும் முருகன் இட்லி கடையை சுற்றியே நகர்கிறது. தனுஷ் இயக்குனராகவும், நடிகராகவும் ஜெயித்திருக்கிறார். கிளைமாக்ஸில் தனுஷ் கொடுக்கும் இரண்டு நிமிட ஸ்பீச், அவரின் ரியல் வாழ்க்கையை பிரதீபலிப்பது போல் இருந்தது. கிராமத்து வாழ்க்கையை பற்றி படம் பேசுகிறது. சண்டை இல்லாமல், கலாச்சாரத்தோடு ஒன்றிய படமாக இது உள்ளது. கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம்.



  • Oct 01, 2025 13:56 IST

    இட்லிக்கடை ட்விட்டர் விமர்சனம் - நடிகர் கயல் தேவராஜ்

    அனைவருக்கும் பிடித்த தலைப்பு. பண்பட்ட குணச்சித்திர நடிகர்களின் நடிப்பு. 'ப.பாண்டி', 'ராயன்', 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' ஆகிய படங்களை தொடர்ந்து @dhanushkraja  இயக்கத்தில் மீண்டும் வெற்றிக்கொடி பறக்கிறது.



  • Oct 01, 2025 13:46 IST

    இட்லிக்கடை படம் பார்க்க வந்த தனுஷ் மகன்கள்

    இட்லிக்கடை படம் பார்க்க வந்த தனுஷ் மகன்கள் திரையரங்கில் செல்ஃபி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.



  • Oct 01, 2025 13:40 IST

    தனுஷ் மகனுடன் கைக்குலுக்கிய அருண்விஜய்

    தனுஷின் இட்லிக்கடை முதல்காட்சி பார்க்க வந்தபோது தனுஷின் மகன்கள் லிங்கா மற்றும் யாத்ராவுக்கு கைக்குலுக்கி அருண்விஜய் கட்டியணைத்தார். 

     



  • Oct 01, 2025 13:25 IST

    இட்லிகடை ட்விட்டர் விமர்சனம்

    முதல் காட்சி முடிவடைந்த நிலையில் படம் அனைவரும் கொண்டாடப்படும் படம் என கலவையான விமர்சனத்தை ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

     



  • Oct 01, 2025 13:20 IST

    இட்லிக்கடை ட்விட்டர் ரிவியூ

    இயக்குனர் @dhanushkraja மேலும் ஒரு இதயத்தைத் தொடும் அழகான குடும்ப பொழுதுபோக்கை வழங்குகிறது.. மிகவும் பொழுதுபோக்கு மற்றும் வேரூன்றியது.. ரொம்ப நல்லா இணைஞ்சு..நடிகன் @dhanushkraja அவர் ஏன் நடிப்பு அதிகாரமாக இருக்கிறார் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் .எமோஷனல் காட்சிகளாக இருந்தாலும் சரி, நகைச்சுவைக் காட்சியாக இருந்தாலும் சரி, அவர் பெரிய நேரத்தை மிஞ்சுகிறார்..



  • Oct 01, 2025 13:17 IST

    இட்லி கடை படம் எப்படி உள்ளது? - ரசிகர்கள் விமர்சனம்

    ஜிவி பிரகாஷின் இசையில் முதல் பாதி முழுக்கவும் பின்னணி இசை நன்றாக இருந்தது, இரண்டாம் பாதியில் வரும் பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக இருந்தது. ஒரு கிராமத்து படத்திற்கு ஏற்ற ஒளிப்பதிவை கிரண் கவுசிக் கொடுத்துள்ளார். சொந்த ஊரை மறந்து வெளியூருக்கு சென்று வேலை பார்க்கும் அனைவருக்கும் இட்லி கடை படம் கனெக்ட் ஆகும். என்னதான் வெளியூருக்கு சென்றாலும் தங்களது சொந்த ஊரையும் மறக்கக்கூடாது என்பதை தனுசு இந்த படத்தின் மூலம் நினைவுபடுத்துகிறார். முதல் பாதி தொடங்கியதில் இருந்து இடைவெளி வரை நிதானமாகவும், அதே சமயம் சுவாரசியமாகவும் நகர்கிறது. இரண்டாம் பாதியில் படம் சற்று தொய்வடைகிறது என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். 



  • Oct 01, 2025 13:16 IST

    தனுஷ் இயக்கத்தில் இட்லிகடை

    தனுஷ் இந்த இட்லி கடை படத்தை எழுதி இயக்கியுள்ளார். தன் சிறுவயதில் பார்த்த சில விஷயங்களை வைத்து ஒரு கற்பனையாக இந்த படத்தை இயக்கியுள்ளதாக முன்பு தெரிவித்து இருந்தார். பா பாண்டி, ராயன் மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படங்களை தொடர்ந்து இட்லி கடை படத்திலும் ஒரு இயக்குனராக வெற்றி பெற்றுள்ளார் தனுஷ்.



  • Oct 01, 2025 12:50 IST

    ரசிகர்களுடன் ‘இட்லி கடை’ படம் பார்த்த அருண் விஜய்!



  • Oct 01, 2025 12:09 IST

    வன்முறை எதற்கும் தீர்வல்ல - இயக்குநராக ஸ்கோர் செய்த தனுஷ்

    இட்லி கடை திரைப்படம் அருமையான குடும்ப திரைப்படம். வன்முறை எதற்கும் தீர்வல்ல என்ற கருப்பொருள் அழுத்தமாக சொல்லப்பட்டுள்ளது. தனுஷ் நடிகராகவும் இயக்குநராகவும் ஸ்கோர் செய்துள்ளார்.



  • Oct 01, 2025 11:44 IST

    முழுமையான குடும்ப திரைப்படம் - நடிகர், இயக்குநராக கலக்கிய தனுஷ்

    ’இட்லி கடை’ முழுமையான குடும்ப திரைப்படம். நடிகர் இயக்குநராக தனுஷ் கலக்கிவிட்டார். இந்த படம் டார்கட் செய்த ஆடியன்ஸை கவரும். கிராமப்புற மக்களுக்கு இப்படம் மிகவும் பிடிக்கும்.



  • Oct 01, 2025 11:22 IST

    மனதை வருடும் திரைப்படம் - பாக்ஸ் ஆபிஸில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்

    தனுஷ் இயக்கத்தில், 'பா பாண்டி' படத்திற்குப் பிறகு வந்த மிகச் சிறந்த, மனதை வருடும் படம் இது. எளிமையான எழுத்து, சிறப்பான கதை சொல்லல்,  துடிப்பான நடிகர்கள். இசை மற்றும் தயாரிப்பின் பலம் கொண்ட ஒரு திரைப்படம். இட்லி கடை படத்தின் கருப்பொருளும் செய்தியும் மிகவும் சக்தி வாய்ந்தவை. அது இதயத்தை பேச வைப்பதால், பாக்ஸ் ஆபிஸில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 



  • Oct 01, 2025 10:55 IST

    கிராமப்புற ரசிகர்கள் மத்தியில் இந்த படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்

    “இட்லிகடை” திரைப்படம் ஒரு சரியான குடும்ப பொழுதுபோக்கு படமாக ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக கிராமப்புற ரசிகர்கள் மத்தியில் இந்த படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. எளிய கதை மற்றும் திரைக்கதையுடன், இயக்குனர் தனுஷ் இந்த படத்தை உணர்வுகள், நகைச்சுவை, காதல் மற்றும் ஆக்‌ஷன் என அனைத்தையும் சரியான சமநிலையில் கலந்து, ருசிகரமாக பரிமாறியுள்ளார் என்று ரசிகர் ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 



  • Oct 01, 2025 10:47 IST

    படத்தின் முதல் பாதி அபாரமாக உள்ளது

    தமிழ்நாட்டிற்கு வெளியே நடைபெற்ற முதல் நாள் முதல் காட்சி பார்வைகளில் இருந்து கிடைத்த தகவல்களின் படி, இட்லிகடை திரைப்படத்தின் முதல் பாதி அபாரமாக உள்ளது என ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். சிறந்த எழுத்து, சுருக்கமான திரைக்கதை மற்றும் தனுஷின் நிஜமான நடித்த திறமை ஆகியவை கூடியுள்ள இந்த முதல் பாதி, ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது.



  • Oct 01, 2025 10:45 IST

    நடிப்பு, இயக்கத்தில் கலக்கும் தனுஷ் - எமோஷனல் சீன் வேற லெவல்!

    இட்லிகடை திரைப்படத்தில் இயக்குனர் தனுஷ் ஒரு பக்கத்தில் சிறந்த எழுத்துத்திறமையால் கலக்குகிறார். மற்றொரு பக்கம், நடிகராக தனுஷ் உணர்வுப்பூர்வமான காட்சிகளில் வேற லெவல் நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார். இப்படத்தில் அவர் காட்டிய திறமைக்கு வாழ்த்து சொல்ல வேண்டியதுதான். ஒட்டுமொத்தமாக, தனுஷின் இரட்டைshade கலக்கும் அபாரமான பங்களிப்பு படம் முழுக்க மின்னுகிறது.



  • Oct 01, 2025 09:45 IST

    கணிக்கக்கூடிய கதை... ஆனாலும் அட்டகாசம் - இடைவேளைக்கு முந்தைய காட்சி வேற லெவல் 

    "எளிமையான, அழகான படம். கதை கணிக்கக்கூடிய மற்றும் மெதுவாக இருந்தாலும், அது உணர்ச்சி ரீதியாக இணைக்கப்பட்டுள்ளது. ஜி.வி.யின் பாடல்கள் மற்றும் இசை நல்ல சப்போர்ட்டாக இருக்கிறது. அறிமுக சீன், கண்ணுக்குட்டி காட்சி மற்றும் இடைவேளைக்கு முந்தைய இட்லி சுவை காட்சி சூப்பர்." என்று ரசிகர் ஒருவர் கூறியுள்ளார். 



  • Oct 01, 2025 08:58 IST

    இட்லி கடை  - ரசிகர் விமர்சனம் 

    "சிறு வயதில் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்த கதாபாத்திரங்களை வைத்து கற்பனை கதையாக இட்லி கடை படத்தை இயக்கியுள்ளார் தனுஷ். ஒரு பக்கம் கிராமத்து வாழ்க்கை , இன்னொரு பக்கம் நகரத்து வாழ்க்கை என தொடங்குகிறது கதை. முதல் 30 நிமிடங்களில் உணர்ச்சிகரமாக கதை சொல்கிறார் இயக்குநர் தனுஷ். முதல் பாதி எமோஷனலாகவும் அதே நேரத்தில் சுவாரஸ்யமாகவும் அமைந்துள்ளது. ஜி.வி பிரகாஷ் பின்னணி இசை தனி கவனம் பெறுகிறது.

     கதை உணர்ச்சிவசமாக இருந்தாலும் ஒவ்வொரு காட்சியிலும் சோகம் வலிந்து திணிக்கப்படுகிறது. எப்போதும் போல் நடிப்பில் அசத்தியிருக்கிறார் தனுஷ். நித்யா மேனன் கதாபாத்திரம் சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது. தனுஷ் தந்தையாக வரும் ராஜ்கிரண் உணர்ச்சிவசமான நடிப்பால் கவர்கிறார். தனுஷ் மற்றும் அருண் விஜயின் இடையிலான மோதலுடன் முடிகிறது முதல் பாதி. சின்ன சின்ன காட்சிகளில் தனுஷ் உணர்வுப்பூர்வமாக இப்படத்தை அனுகியிருக்கிறார் தனுஷ். ஃபேமிலி ஆடியன்ஸ் பார்த்து ரசிக்க ஏற்ற வகையில் உருவாகியுள்ளது இட்லி கடை." என்று ரசிகர் ஒருவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார் 



  • Oct 01, 2025 08:42 IST

    தனுஷ் மீண்டும் நடிப்பில் உச்சம்; படத்தின் முதல் பாதி செம்ம..! இட்லி கடை விமர்சனம்

    இட்லி கடை விமர்சனம் தொடர்பாக ரசிகர் ஒருவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "தனுஷ் மற்றும் அருண்விஜய் ஆகியோரின் வெளிநாட்டு நவீன பின்னணி மற்றும் கதாபாத்திரத்துடன் படம் தொடங்கியது. நித்யாமேனனின் கதாபாத்திரம் மற்றும் கதாபாத்திரத்தைச் சுற்றியுள்ள வேடிக்கையான தருணங்கள் மிகவும் பிடித்திருந்தது. நடிகர் தனுஷ் மீண்டும் ஒருமுறை நடிப்பால் உச்சத்தை அடைந்துள்ளார். 

    குறிப்பாக உணர்ச்சிகரமான காட்சிகள். ஜி.வி.பிரகாஷ் மோன்டேஜ் பாடல்கள் மற்றும் இடைவேளையின் போது அவரது பின்னணி இசை சிறப்பாக இருந்தது. இடைவேளை படத்தின் பின்னணி காட்சிகள் சிறப்பாக இருந்தன. முதல் பாதி டிரெய்லரில் இருந்து நாம் பார்த்ததுதான், இரண்டாம் பாதியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார். 



  • Oct 01, 2025 08:39 IST

    தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணைய பக்கத்துக்கு அன்புடன் வரவேற்கிறோம்!

    தனுஷ் இயக்கி நடித்திருக்கும்  இட்லி கடை இன்று முதல் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், படத்தின் விமர்சனம் தொடர்பாக உடனுக்குடன் அறிய தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள். 



Dhanush

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: