/tamil-ie/media/media_files/uploads/2019/11/a21-1.jpg)
IFFI 2019 opening ceremony: Rajinikanth, Amitabh Bachchan special photos - சர்வதேச திரைப்பட விழா: ஐகானிக் சூப்பர் ஸ்டார்.... பிக்பாஸ் அமிதாப் ஜி! ஸ்பெஷல் புகைப்படங்கள்
கோவாவில் நடைபெற்று கொண்டிருக்கும் இந்த ஆண்டுக்கான 50-வது சர்வதேச திரைப்பட விழாவினை நடிகர் ரஜினிகாந்தும், இந்தி நடிகர் அமிதாப் பச்சனும் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் அமிதாப் பச்சனும் இணைந்து ரஜினிகாந்திற்கு ‘ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி’ விருது வழங்கி கவுரவித்தனர்.
நடிகர் ரஜினிகாந்த் திரைத்துறைக்கு ஆற்றிய ஒப்பற்ற பணியை கௌரவிக்கும் விதத்தில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
விருது பெற்ற பிறகு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், "என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி.
இந்த விருதினை தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கும் கோவா முதல்வருக்கும் எனக்கு முன்மாதிரியாக திகழும் அமிதாப்பச்சனுக்கு நன்றி" என்றார்.
இந்த விழாவில் அமிதாப் பச்சனுக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது வழங்கப்படுகிறது. அவரைச் சிறப்பிக்கும் வகையில், அவர் நடித்த 6 படங்கள் திரையிடப்படுகின்றன.
இந்த வருடம், 76 நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட படங்களும், இந்திய மொழிகளைச் சேர்ந்த 41 படங்களும் திரையிடப்படுகின்றன.
இதில், பார்த்திபன் இயக்கி, நடித்த ‘ஒத்த செருப்பு’ மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ‘ஹவுஸ் ஓனர்’ ஆகிய 2 தமிழ்ப் படங்கள் திரையிடப்படுகின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.