இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாகவிருக்கும் நிலையில், ஒரு கடினமான வெஸ்டர்ன் கிளாஸிக் கிட்டார் நோட்ஸை, தான் எப்படி ஒரு ஃபோக் நோட்ஸாக மாற்றினேன் என்பது குறித்து சுவாரசியமாகக் கூறினார். பின்னர், “இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், என்னைப் பற்றி பயோபிக் எடுக்கிறார்கள் இதெல்லாம் அதில் வருமா தெரியாது. ஏனென்றால், என்னைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டு சந்தோஷப் படுங்கள், நான் எல்லாவற்றையும் என் மனதுக்குள் வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறேன்” என்று இளையராஜா ஜாலியாகப் பேசினார்.
இந்தியாவிலும் உலகம் முழுவதும் மக்களாட்சி நிலவினாலும், தமிழ் திரையுலகையும் இசை ரசிகர்களையும் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக ஒரு ராஜா ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். அந்த ராஜா வேறு யாருமல்ல, இளையராஜா இசைஞானி இளையராஜா. தனது இசையால் மக்கள் மனங்களில் வாழ்க்கையில் இரண்டறக் கலந்து நிற்கிறார்.
சினிமாவில் தற்போது ஒரு போக்கு தலையெடுத்து இருக்கிறது. அது சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கிறார்கள். அந்த வரிசையில் இசைஞானி இளையராஜாவின் பயோபிக், தனுஷ் நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகிறது.
தனது சகோதரர் பாவலர் வரதராஜன், பாவலர் பிரதர்ஸ் குழுவில் பாடிய இளையராஜா, பின்னர் சகோதரர்களுடன் சென்னை வந்து தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக கோட்டை இல்லாமல் கொடி இல்லாமல் தனது இசையால் ராஜாவாக மூடிசூடி மக்களின் மனங்களை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். அன்னக்கிளியில் தொடங்கி விடுதலை 2, இளையராஜா பயோபிக் வரை அவருடைய இசை தொடர்கிறது. இடையில், ஒரு சிம்பொனி எழுதியிருக்கிறார். ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தங்களுக்கு இசையமைக்கிறார்.
இந்த சூழலில், இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாகவிருக்கும் நிலையில், ஒரு கடினமான வெஸ்டர்ன் கிளாஸிக் கிட்டார் நோட்ஸை, தான் எப்படி ஒரு ஃபோக் நோட்ஸாக மாற்றினேன் என்பது குறித்து சுவாரசியமாகக் கூறினார்.
சென்னையில் ஜூலை 14-ம் தேதி இளையராஜா இசை கச்சேரி நடத்தினார். அப்போது ரசிகர்களிடம் பயோபிக் குறித்து பேசினார்: “சில பாடல்கள் உருவானது பற்றி நான் சொல்வதால் கிளாஸ் எடுக்கிறேன் என்று நினைக்க வேண்டாம். என்னுடைய பயோபிக் உருவாகவிருக்கிறது. சில விஷயங்களை நான் பகிர்ந்திருக்கிறேன்.அதெல்லாம் அந்தப் படத்தில் வருமா என்று தெரியவில்லை. என்னைப் பற்றி முழுமையாக தெரிந்துகொண்டு நீங்கள் சந்தோஷப்பட்டால்தானே எனக்கு சந்தோஷமாக இருக்கும். அனைத்தையும் எனது மனதில் வைத்து நான் என்ன செய்யப்போகிறேன்” என்று ஜாலியாகப் பேசினார்.
முன்னதாக, டி ஆல்மோர் என்ற வெஸ்டர்ன் கிளாஸிக் கிட்டார் நோட்சை ஒரு கிட்டார் இசைக் கலைஞரை வாசிக்கச் சொன்னார். இது போல, நான் தப்புத்தப்பா வாசிக்கவில்லை. மேடையில், இவ்வளவு கூட்டத்தைப் பார்த்து சற்று திகைப்படைந்திருக்கலாம், அதனால், இப்படி வாசித்திருக்கலாம். இந்த நோட்ஸை நான் கஷ்டப்பட்டு வாசித்து பயிற்சி செய்து கற்றுக்கொண்டேன். பின்னர், இந்த வெஸ்டர்ன் நோட்ஸை ஒரு ஃபோக் நோட்ஸாக மாற்றினால் என்ன என்று யோசித்து தான் உருவாக்கிய அந்த நோட்ஸை வாசிக்கச் சொன்னார். அந்த நோட்ஸைக் கேட்டு, அரங்கமே கைத்தட்டலாலும் சந்தோஷத்தாலும் ஆரவாரம் செய்தது. அந்த பாடல்தான், இளையராஜா இசையமைத்த ‘மாச்சானைப் பார்த்திங்களா’ என்ற பாடல்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.