Advertisment

இளையராஜாவின் காப்புரிமை சர்ச்சை : கலையின் உரிமை பற்றிய கேள்வியை எழுப்புகிறதா?

இளையராஜாவின் காப்புரிமை தொடர்பான நோட்டீஸ்கள் அவரது நெருங்கிய நண்பர்களுக்கு எதிராக ரசிகர்களை பிளவுபடுத்தியுள்ளது. அவரது தீவிர ரசிகர்கள் சிலர் கூட இளையராஜாவின் எதிர்வினை குறித்து விமர்சித்து வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Ilayaraja Mastro
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இந்திய திரைப்பட இசையில் புரட்சியை ஏற்படுத்திய மேஸ்ட்ரோ இளையராஜா, சமீப காலமாக பாடல் காப்புரிமை மற்றும் சொத்துரிமை தொடர்பான நடவடிக்கைளில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். சக கலைஞர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு எதிராக அவர் எடுத்த சட்டப்பூர்வ நடவடிக்கைகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதில் சமீபத்தில் வெளியான ரஜினிகாந்தின் கூலி பட டீசரில், இளையராஜா இசையமைத்த தங்க மகன் படத்தில் இடம்பெற்ற டிஸ்கோ டிஸ்கோ பாடலை முறையான அங்கீகாரம் இல்லாமல் பயன்படுத்தியதற்காக இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது பெரும் விவாதமாக வெடித்துள்ளது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க : Ilaiyaaraja’s copyrights controversy asks an existential question about the ownership of art

இளையராஜாவின் நிலைப்பாடு

இந்திய சினிமாவின் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக அடிக்கடி புகழப்படும் இளையராஜா, நான்கு தலைமுறைகளுக்கு மேலாக 7,000 க்கும் மேற்பட்ட பாடல்களை உள்ளடக்கிய ஒரு வளமான பாரம்பரியத்தை கொண்டுள்ளவர். இளையராஜாவின் செயல்பாடுகள், இந்த இசையமைப்பின் படைப்பாளியாக, அவற்றின் பயன்பாட்டுக்கான பிரத்யேக உரிமைகளை அவர் தக்கவைத்துக்கொள்கிறார் என்ற நம்பிக்கையில் அடித்தளமாக உள்ளது.

அவர் இசையமைத்த பாடல்களை பிற திரைப்பட இயக்குனர்கள் மற்றும் ஸ்ட்ரீமிங் தளங்களுக்கு விற்று கூடுதல் பணத்திற்காக தனது பாடலைப் பயன்படுத்துவதற்கு பதிப்புரிமை உரிமையாளர்களுக்கு எதிராக இளையராஜா செயல்படுகிறார். இளையராஜாவின் சுமார் 4500 பாடல்களின் காப்புரிமையை வைத்திருக்கும் எக்கோ ரெக்கார்டிங் கம்பெனிக்கு எதிராக தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இளையராஜாவின் பார்வையில், அவரது இசையை உரிய அனுமதி இல்லாமல் பயனப்டுத்துவது, அவரது படைப்பு முயற்சிகளையும் பொருளாதார உரிமைகளையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.

இதன் காரணமாக நெருங்கிய நண்பர்கள் மற்றும் ஒத்துழைப்பாளர்களுக்கு எதிரான அவரது சட்ட நடவடிக்கைகள், எக்கோவுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற தேவையான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. இளையராஜாவின் இந்த நடவடிக்கை, அவரது ஆதாயங்களுக்கு அப்பாற்பட்ட எல்லைப் பிரச்சினையைத் காட்டுகிறது.

வாதத்தின் மறுபக்கம்

மறுபுறம், பதிப்புரிமை அமலாக்கத்தில் இளையராஜாவின் கடுமையான நிலைப்பாடு இசை மற்றும் திரைப்படத் தொழில்களை வரையறுக்கும் கூட்டு மனப்பான்மைக்கு தீங்கு விளைவிப்பதாக விமர்சகர்கள் கூறி வருகின்றனர். சினிமா சூழலில், இசை என்பது இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் பிற இசைக்கலைஞர்களை உள்ளடக்கிய ஒரு கூட்டு முயற்சி. ஒரு பாடல் இளையராஜாவுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல, அது பாடலாசிரியர்கள், பாடகர்கள் மற்றும் அதன் உருவாக்கத்தின் ஒரு பகுதியாக இருந்த பிற கலைஞர்களுக்கு சொந்தமானது என்று எக்கோவின் சட்ட ஆலோசகர்  நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இளையராஜாவின் சட்டப் போராட்டங்கள், குறிப்பாக நெருங்கிய நண்பர்களுக்கு எதிரான நடவடிக்கைகள், அவரது பொதுப் புகழைக் கெடுத்து, பல ஆண்டுகளாக அவர் கட்டியெழுப்பிய நல்லெண்ணத்தை சிதைப்பதாகவும் பலர் நம்புகிறார்கள். இந்த நடவடிக்கை சினிமா துறையில் உள்ள நட்புறவு மற்றும் பரஸ்பர மரியாதைக்கு முரணாக உள்ளது. உதாரணமாக, பிரபல பின்னணிப் பாடகரும் அவரது நீண்டகால நண்பருமான எஸ்.பி.பாலசுப்ரமணியம் தனது பாடல்களை பாட கூடாது என்று இளையராஜா கூறியது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

சமீபத்தில்,  வெளியான மஞ்ஜூமல் பாய்ஸ் என்ற மலையாள படத்தில் குணா படத்தில் இடம்பெற்ற கண்மணி அன்போட காதலன் பாடலை பயன்படுத்தியதற்காக அப்படத்தின் தயாரிப்பாளர்கள் மீது இளையராஜா வழக்கு தொடர்ந்தார். இளையராஜாவுக்கு புகழ் சேர்க்கும் வகையில், ரசிகர்கள் படத்தை கொண்டாடிய நிலையில், இசையமைப்பாளர் அனுப்பிய சட்ட நோட்டீஸ் அகங்காரமானது மற்றும் தேவையற்றது என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

தாக்கங்கள்

இளையராஜாவின் காப்புரிமை தொடர்பான நடவடிக்கைகளை சுற்றியுள்ள சர்ச்சை தனிப்பட்ட சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டது, உண்மையில் கலை யாருக்கு சொந்தமானது என்ற கேள்வியை எழுப்புகிறது. கலை அதன் படைப்பாளரின் தனிச் சொத்தா அல்லது அது பொதுக் களத்தில் வெளியிடப்பட்டவுடன் பார்வையாளர்களுக்கும் பரந்த கலாச்சார சூழலுக்கும் சொந்தமானதா? என்பது அவ்வப்போது எழும் கேள்வி.  இந்த விவாதம் இளையராஜாவுக்கு மட்டும் அல்ல; இது உலகளாவிய கலைஞர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், கலாச்சார பாரம்பரியத்தை வளர்ப்பதற்கும் இடையிலான பதற்றத்தை வெளிப்படுத்துகிறது.

மஞ்சுமெல் பாய்ஸ் படத்திற்கு எதிரான இளையராஜாவின் சட்ட நோட்டீஸ் ரசிகர்களை பெரிதும் காயப்படுத்துகிறது, ஏனெனில் அது படத்தில் இந்த பாடல் இடம்பெற்ற கொண்டாட்டத்தை மதிக்காமல், படத்துடன் சேர்ந்து பாடலை ரசிக்க வைத்தது. திரைப்படத்தின் நம்பமுடியாத தருணத்தையும் பாடலையும் தனது சொந்தமாகப் போற்றிய ஒரு ரசிகன், திடீரென்று இளையராஜாவின் இந்த நோட்டீஸ் விவகாரம், து தன்னுடையதாக இருக்க முடியாது ஒரு ரசிகனை உணர வைக்கிறது.

பல இசைக்கலைஞர்கள் இளையராஜாவை துரோணாச்சாரியாராகக் கருதுகிறார்கள். அவர்கள் தங்கள் இருப்பையும் வெற்றியையும் படைப்பாளியிடம் கூறிவிட்டனர். உதாரணத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் உள்ளிட்ட பலர் தாங்கள் இசையமைப்பாளர்களாக மாற இளையராஜாவின் இசையால் ஈர்க்கப்பட்டதே காரணம் என்று கூறுகிறார்கள். எனவே, ஒரு கலைப்படைப்பு, பொது களத்தில் வெளியிடப்பட்டதும், படைப்பாளியின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட ஒன்றாக மாறும்.

எனவே, இளையராஜாவின் வழக்கு, படைப்பாளிகளின் உரிமைகளை அங்கீகரிக்கும் அதே வேளையில் கலை முயற்சிகளின் கூட்டுத் தன்மைக்கு இடமளிக்கும் பதிப்புரிமைச் சட்டத்தின் நுணுக்கமான அணுகுமுறையின் அவசியத்தை மேற்கோள் காட்டுகிறது. அறிவுசார் சொத்துரிமை பற்றிய சட்டங்கள் இன்னும் கடுமையான விதிமுறைகளுடன் வரையறுக்கப்படாத நாட்டில் பதிப்புரிமை மற்றும் உரிமையைப் பற்றிய மிகவும் தேவையான விவாதத்தையும் இது சுட்டிக்காட்டுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Ilayaraja
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment