scorecardresearch

‘100 ஆண்டுக்கு பிறகு ஒரு பட்டியல் போட்டால் அதில் முக்கிய நபராக இளையராஜா இருப்பார்’: தியாகராஜன் குமாரராஜா

100 ஆண்டுகளுக்கு பிறகு அதிகம் தாக்கம் ஏற்படுத்திய நபர்களின் பட்டியலை தயாரித்தால், அதில் இளையராஜா முக்கியமான இடத்தில் இருப்பார் என்று இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா தெரிவித்துள்ளார் .

தியாகராஜன் குமாரராஜா

100 ஆண்டுகளுக்கு பிறகு அதிகம் தாக்கம் ஏற்படுத்திய நபர்களின் பட்டியலை தயாரித்தால், அதில் இளையராஜா முக்கியமான இடத்தில் இருப்பார் என்று இயக்குநர் தியாகராஜன்  குமாரராஜா தெரிவித்துள்ளார் .

தியாகராஜன்  குமாரராஜாவின் உருவாக்கத்தில் அமேசான் பிரைமில்  ’மார்டன் லவ் சென்னை’ என்ற  ஆந்தாலஜி வெப் சீரிஸ் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இதற்கு இசையராஜா இசையமைத்துள்ளார். மேலும் இந்த வெப்சீரிஸ்-யின் இசை பலரையும் கவர்ந்துள்ளது.

லாலாகுண்டா பொம்மைகள், இமைகள்,  காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்குற எமோஜி, மார்கழி , பறவை கூட்டில் வாழும் மான்கள், நினைவோ ஒரு பறவை உள்ளிட்ட  தலைப்பு கொண்ட சீரிஸ் தற்போது அமேசான் ப்ரைமில் காணக்கிடைக்கிறது.

இந்நிலையில் இது தொடர்பாக தியாகராஜன் குமாரராஜா பேட்டியளித்துள்ளார் “ இளையராஜாவை மற்றவர்கள் தவறாக புரிந்துகொண்டுள்ளனர். அவர் மிகவும் பணிவானவர். மற்றவர்கள் கூறுவதுபோல், அவருடன் பணிபுரிவது கடினமாக இல்லை.  உண்மையை சொன்னால், அவரது நேரத்தை வீணாக்குவது அவருக்கு பிடிக்காது. படத்தை பார்த்தும், அது சரியில்லை என்றால் நேராக சொல்லிடுவார். தொடர்ந்து அந்த படத்தை எப்படி காப்பாற்றுவது என்றுதான் அவர் சிந்திப்பார். ’படம் எடுப்பது உங்கள் வேலை என்றும் எனது வேலை இசை மட்டுமே “ என்று தெளிவாக இருப்பார். நான் சொல்வது இப்போது மிகையாக தெரியலாம். ஆனால் 100 வருடங்களுக்கு பிறகு முக்கியமானவர்கள் அல்லது அதிகம் தாக்கம் ஏற்படுத்தியவர்கள் யார் என்ற பட்டியலிட்டால் அதில் இளையராஜா இருப்பார்” என்று அவர் கூறினார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Ilaiyaraaja will be remembered after 100 years and important person

Best of Express