Ilaiyaraja Dubai music concert 2020 : இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ஒன்று வருகின்ற மார்ச் மாதம் 27ம் தேதி துபாயில் நடக்கின்றது. இது குறித்து துபாயில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் இளையராஜா. அப்போது அவரிடம் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு இளையராஜா பதில் அளித்து வந்தார்.
Advertisment
ரவி வர்மா ஓவியங்களுக்கு உயிர் கொடுத்த 11 நடிகைகளும் நடனக் கலைஞர்களும்!
தமிழ் திரைப்பட உலகில் இசையமைப்பாளர்கள் சுதந்திரமாக இசையமைக்கின்றார்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு இளையராஜா “இசையமைப்பாளர்களுக்கு சுதந்திரம் இல்லை என்று யாரும் சொல்லவில்லை. அவர்களின் விருப்பதற்கே இசையமைத்தால் அது எப்படி சுதந்திரம் என்று கூற முடியும். ஒரு இசைக்கலைஞர்கள் சுதந்திரமாக இசை அமைப்பதால் மட்டுமே அந்த பாடல்கள் மக்கள் மத்தியில் நிலைத்து நிற்பதிலை.
ஒரு பாடலை குறிப்பிட்டுச் சொல்லி அதே போன்ற பாடல்கள் வேண்டும் என்று என்னிடம் யாராவது கோரிக்கை வைத்தால் அதை என்னால் ஒரு போதும் செய்ய இயலாது. மற்றவர்களால் அது இயலும். ஆனால் நானோ ஒவ்வொரு பாடலையும் புதிதாக உருவாக்குகின்றேன்.
யாராக இருந்தாலும் 7 ஸ்வரங்களில் தான் பாடல்களை இசைக்கின்றார்கள். நானும் அப்படித்தான் இசைக்கின்றேன். என்னிடம் வரும் போது பாடல் புதுமை பெறுகிறது. அவர்களிடம் செல்லும் போது அவர்களுக்கு ஏற்ற மாதிரி மாறிக் கொள்கின்றது என்று பதில் அளித்தார் இளையராஜா.