முதல்வருக்கு என்மேல் இவ்வளவு பாசம், அவருக்காக இதை செய்வேன்; மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி சொன்ன இளையராஜா!

"நேற்று தமிழக அரசு நடத்திய பாராட்டு விழாவில், அதீத மகிழ்ச்சியின் காரணமாக என்னால் அதிகம் பேச இயலவில்லை" எனத் தெரிவித்துள்ளார் இளையராஜா. அவர் பேசியதை பற்றி விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க

"நேற்று தமிழக அரசு நடத்திய பாராட்டு விழாவில், அதீத மகிழ்ச்சியின் காரணமாக என்னால் அதிகம் பேச இயலவில்லை" எனத் தெரிவித்துள்ளார் இளையராஜா. அவர் பேசியதை பற்றி விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க

author-image
WebDesk
New Update
download (13)

இசைஞானி இளையராஜாவின் பொன்விழாவை ஒட்டி அவரது பாராட்டு விழா நேற்று மாலை சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு அரசின் ஏற்பாட்டில் விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவில் இளையராஜா இசையமைத்த பல புகழ்பெற்ற பாடல்களும், சிம்பொனி இசையும் வாசிக்கப்பட்டது. இந்த இசை நிகழ்வை ஏராளமான ரசிகர்கள் நேரில் பார்த்து மகிழ்ந்தனர்.

இந்த விழாவில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இசைஞானி இளையராஜாவுடன் கடந்த நாட்களில் பகிர்ந்த அனுபவங்களை நினைவுகூர்ந்து உரையாற்றினார். அதேபோல், உலகநாயகன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கமல்ஹாசன், இளையராஜாவுடன் தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து, அவருக்கு பாராட்டுகளும் புகழ்ச்சிகளும் தெரிவித்தார்.

இசைஞானி இளையராஜா, நேற்று நடைபெற்ற பாராட்டு விழையைத் தொடர்ந்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: "தமிழக அரசு ஏற்பாடு செய்த நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில் மிகுந்த மகிழ்ச்சியால் நான் அதிகமாக பேச முடியவில்லை. இந்த விழாவை சிறப்பாக நடத்திய தமிழக அரசு, முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பிற அமைச்சர்களுக்கு என் இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். விழாவில் கலந்து கொண்டு அதை சிறப்பித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும், உலகநாயகன் கமல்ஹாசனுக்கும், பொதுமக்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார். 

மேலும் அந்த வீடியோவில் பேசுகையில், "ஒரு பாராட்டு விழாவை மிகச்சிறப்பாக திட்டமிட்டு நடத்தியதில் நெகிழ்ந்து போய்விட்டேன். நான் முதல்வரிடம் கேட்டேன்.. எதற்காக எனக்கு இதை செய்கிறீர்கள் என்று கேட்டேன். இவ்வளவு அன்பு செலுத்துவதற்கு நான் என்ன செய்தேன்? நான் இதையெல்லாம் எதிர்பார்ப்பவன் அல்ல. சிம்பொனியில் சிகரம் தொட்டதால் அதை மிக முக்கியமான ஒன்றாக முதல்வர் கருதி, எனக்குப் பாராட்டு விழா நடத்துவதை தனது கடமையாக எண்ணிச் செய்திருக்கிறார். " எனத் தெரிவித்துள்ளார்.

"சங்க இலக்கிய நூல்களுக்கு இசையமைக்க வேண்டும் என முதல்வர் என்னிடம் வேண்டுகோள் விடுத்ததும், உங்களைத் தவிர வேறு யாரும் இதனைச் செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்ததும் மேலும் மேலும் எனக்கு ஊக்கம் அளிக்கிறது. ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் மேடைகளில் மாற்றி மாற்றி நான் அவருக்குத்தான் நல்ல பாட்டு போடுகிறேன் என சொல்லுவார்கள். ஆக, நான் இருவருக்குமே நல்ல பாடல்களை இசையமைத்திருக்கிறேன் என்பதற்கு அவர்கள் இருவரின் வார்த்தைகளே சாட்சி." எனத் தெரிவித்துள்ளார் இளையராஜா.

இளையராஜா நேற்று விழா மேடையில் உரையாற்றியபோது, இசை உலகத்தில் ஒரு இசையமைப்பாளருக்காக பாராட்டு விழா நடத்தியது என்பது தமிழக அரசின் பெருமை எனக் குறிப்பிட்டார். முன்னாள் முதல்வர் கருணாநிதி தனது மீது காட்டிய அன்பை தற்போது அவரது மகன் ஸ்டாலின் தொடர்கிறார் என்றும், அதற்குக் காரணம் இசைதான் என கூறினார். 

‘இசைஞானி’ என்ற பட்டத்தை கருணாநிதி தந்தது, சிம்பொனி இசைக்கச் செல்வதற்கு முன் முதல்வர் அவரது வீட்டுக்கு வந்து பாராட்டியதும், விமான நிலையத்தில் வரவேற்றதையும் நினைவுகூர்ந்தார். சிம்பொனி எழுதுவதற்காக தனது குழந்தைகளுடன் செலவழிக்க வேண்டிய நேரத்தையும் விலக்கினார் என்றும், அதே போல ரசிகர்கள் விரும்பிய பாடல்களையும் அதனால் இயற்ற முடிந்தது என்றும் உணர்ச்சிபூர்வமாக பகிர்ந்தார்.

முன்னதாக பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், இளையராஜாவுக்கு பாரதரத்னா வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து, ஆண்டுதோறும் இசை கலைஞர்களுக்கு இளையராஜா விருது வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் சங்க இலக்கியங்களை ஆல்பமாக வெளியிட வேண்டும் என்றும் அவர் இளையராஜாவிடம் வேண்டுகோள் வைத்தார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: