ஒரே கத்தி, வெட்டு, ரத்தமாக இருக்கு; நான் பண்ண மாட்டேன்: கமல் படத்தை மறுத்த இளையராஜா

இசைஞானி இளையராஜாவுக்கும் கமல்ஹாசனுக்கும் இடையிலான உறவு என்பது ரொம்பவுமே சுவாரஸ்யமானது. அப்படி இரண்டு பெரும் சேர்த்து பயணித்த திரைப்படம் விருமாண்டி. அதை பற்றி ஒரு சுவாரசியமான கதையை பார்ப்போம்.

இசைஞானி இளையராஜாவுக்கும் கமல்ஹாசனுக்கும் இடையிலான உறவு என்பது ரொம்பவுமே சுவாரஸ்யமானது. அப்படி இரண்டு பெரும் சேர்த்து பயணித்த திரைப்படம் விருமாண்டி. அதை பற்றி ஒரு சுவாரசியமான கதையை பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
download (8)

உலகநாயகன் கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் அடையாளம் மட்டுமல்ல, கௌரவம் எனவும் கூறலாம். இவர் தனது 5 வயதில் குழந்தை நட்சத்திரமாக சினிமா வாழ்க்கையை தொடங்கியவர்.

Advertisment

இன்றைக்கு தனது 65 ஆண்டுகால சினிமா அனுபவத்தால், நடமாடும் சினிமா பல்கலைக்கழகமாகத் திகழ்கின்றார். தனக்குத் தெரியாத விஷயத்தை யார் கற்றுக் கொடுத்தாலும் அவர்களிடம் கற்றுக் கொள்ளும் மனநிலை கொண்டவர். 

கமல்ஹாசனைப் பொறுத்தவரை நடிகர், கதாசிரியர், பாடலாசிரியர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர், நடன இயக்குநர், என சினிமாவின் அனைத்து விஷயங்களையும் கரைத்துக் குடித்தவர். இன்றைக்கு மார்க்கெட்டில் எதாவது புதிதாக கேமரா அறிமுகப்படுத்தப்பட்டிருந்தால், அது குறித்தும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும் என முனைப்பு காட்டக்கூடியவர்.

இதில் இளையராஜாவுக்கும் கமல்ஹாசனுக்கும் இருக்கும் உறவு என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாது. தமிழ் சினிமாவே போற்றிப் புகழும் கலைஞர் கமல்ஹாசன் பொது மேடையில் இளையராஜா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்.

Advertisment
Advertisements

அதேமேடையில் இளையராஜாவுக்கு முத்தமும் கொடுத்தார். இந்த அளவுக்கு இருவரும் ஒருவர் மீது ஒருவர் மரியாதையும் அன்பும் வைத்துள்ளார்கள்.

விருமாண்டி படத்தின் கதையை முழுவதுமாக எழுதிமுடித்துவிட்டு படத்திற்கு யாரை இசை அமைப்பாளராக போடலாம் என்ற பேச்சு எழுந்தது. உடனே இயக்குநர் ராசி அழகப்பன் இளையராஜாவைக் கூறியுள்ளார். 

உடனே கமல் , ஏன் எனக் கேட்டுள்ளார். இது போன்று கிராமத்துக் கதைக்கு தனது இசையால் ரசிகர்களுக்கு கடத்திவிடுவார் ஆனால் அவர் சம்மதிப்பாரா என்ற சந்தேகத்தில் பொய் கேட்டிருக்கிறார்கள். 

இளையராஜாவிடம் சென்று விவரத்தைக் கூறியுள்ளார்கள். உடனே அவர், "என்னய்யா இப்பதான் நான் இருக்கறது உங்க கண்ணுக்குத் தெரியுதா? நீங்களே நாலு அஞ்சு பேர வெச்சு இருப்பீங்களே" எனச் செல்லமாக சொல்லியிருக்கிறார். நாளைக்கு வாங்க எனக் கூறிவிட்டாராம்.

"முதலில் கதை சொன்னபோது நன் சம்மதிக்கவில்லை, முதலில் கமல்சார் கதை சொல்லும்போது, சண்டைக் காட்சிகளை மட்டுமே கூறினார். அதற்க்கு எனக்கு இசையமைக்க விருப்பமில்லை. ஆனால் நன் சம்மதம் தெரிவிக்காதது, கமல்சாரிடம் யாரும் கூறவில்லை. ஆனால் அந்த படத்தில் சண்டை காட்சிகள் தவிர பல கதைகள் உள்ளது, அதனால் இன்னும் ஒரு முறை கதையை கேட்டு பாருங்கள் என்று கேத்துக்கொண்டார்கள். அதன் பின்னர் கதையைக் கேட்ட பிறகு செய்து கொடுத்தேன்" என்று கூறியுள்ளார்.

கடைசியில் படத்தில் ஏற்கனவே இருந்த பாடல்களை விட, மேலும் ஒரு பாடலை இசை அமைத்துக் கொடுத்துள்ளார் இளையராஜா. அந்த பாடல்களை இப்போது கேட்டால் கூட அருமையாக இருக்கும். 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: