இந்த பாட்டு இப்போ கேட்டாலும் 1000 பேர் அழுவாங்க, இவ்வளவு ஸ்பெஷல்; கமல் எவர்கிரீன் பாடலை புகழ்ந்த ரஜினிகாந்த்!

இசையமைப்பாளர் இளையராஜாவிற்கான பாராட்டு விழாவில் நடிகர் ரஜினி கலந்து கொண்டு பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

இசையமைப்பாளர் இளையராஜாவிற்கான பாராட்டு விழாவில் நடிகர் ரஜினி கலந்து கொண்டு பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
ilai

இந்த பாட்டு இப்போ கேட்டாலும் 1000 பேர் அழுவாங்க, இவ்வளவு ஸ்பெஷல்; கமல் எவர்கிரீன் பாடலை புகழ்ந்த ரஜினிகாந்த்!

தமிழ் திரையுலகில் கொடிக்கட்டி பறக்கும் இசையமைப்பாளர் இளையராஜா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற பல்வேறு மொழிகளில் 1,500- க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

Advertisment

‘இசைஞானி’ என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இளையராஜா சமீபத்தில் லண்டனில் முழு மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனி இசை நிகழ்ச்சியை நிகழ்த்தி சாதனை படைத்தார். சிம்பொனி இசையை முதலில் நிகழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையை இளையராஜா பெற்றுள்ளார்.

மேலும், ஆசியாவிலேயே  எவரும் இச்சாதனையை இதுவரை நிகழ்த்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இசைத்துறையில் அரைநூற்றாண்டு காலத்தை நிறைவு செய்த இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.

இந்த பாராட்டு விழா செப்டம்பர் 13-ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலி, கமல்ஹாசன், ரஜினி உட்பட பல அமைச்சர்கள், எம்.பி.க்கள்,  திரைப்பிரபலங்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisment
Advertisements

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “தென்பாண்டி சீமையிலே தேரோட்டும் வீதியிலே மான் போல் வந்தவனை யாரடித்தாரோ" போன்ற பாடல்களைக் கேட்கும்போது அனைவரும் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்துவார்கள். தொடர்ந்து வெற்றிகள் மட்டுமே கிடைத்தால், அதன் அருமை தெரியாது. தோல்விகள் ஏற்படும்போதுதான் வெற்றியின் அருமை புரியும் என்றும் 

இன்னொரு இசையமைப்பாளர் வந்தவுடன், இளையராஜாவுடன் பணிபுரிந்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், ரஜினிகாந்த் போன்ற நடிகர்கள் என அனைவரும் அவரை விட்டு செல்கிறார்கள் ஆனால் அதைப்பற்றி அவர் எந்த கவலையும் படவில்லை” என்றார்.

பாராட்டு விழா நடத்திய தமிழ்நாடு அரசு மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஜினி, கமல் உட்பட அனைவருக்கு நன்றி தெரிவித்த இளையராஜா, “பாராட்டு விழாவில் கலந்து கொண்டவர்கள் சிம்பொனி எப்படி இருந்தது என்றும் என்னுடைய திரையுலக 50 வருட வாழ்க்கை எப்படி இருந்தது என்றும் அதில் நடந்த சம்பவங்களை பற்றியும் சொல்லாதது எனக்கு ஒரு சிறு விஷயமாக இருந்தாலும் அது ஒரு விஷயமாக எனக்கு பட்டது. ஆனால்  ரசிகர்களுக்கு மிகவும் சந்தோசமாக இருந்திருக்கும்'' என்றார்.

Rajini Ilaiyaraaja

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: