இளையராஜா 75 நிகழ்ச்சி... மிரட்டும் டிக்கெட் விலை

இசைஞானி இளையராஜா 75 வது பிறந்தநாளையொட்டி இன்றும் நாளையும் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இளையராஜா 75 பாராட்டு விழா நடைபெறுகிறது.

இந்த விழாவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறார்.துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் திரையுலகினர் திரளாகக் கலந்துக் கொள்கின்றனர். பல்வேறு நட்சத்திரங்கள் இளையராஜாவின் பாடல்களைப் பாடி நடனமாடி ரசிகர்களை மகிழ்விக்க உள்ளனர் .

இளையராஜா 75 நிகழ்ச்சி இன்று தொடக்கம்

நாளை இசைஞானி இளையராஜாவின் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரண்டு நாட்கள் நடக்கும் இந்த விழாவிற்கான டிக்கெட்டுகளின் விற்பனை இணையத்தளத்தில் நடைபெற்று வருகிறது. அவ்வாறும் இருக்க, இரண்டு நாட்களுக்குமான பெரும்பாலான டிக்கெட்டுகள் நேற்று முன் தினமே விற்றுத் தீர்ந்தது. இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் விலை ரூ. 590-ல் தொடங்குகிறது.

அதாவது, டிக்கெட் விலை ரூ. 590 முதல் ரூ. 25000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் நாள் டிக்கெட் விலை ரூ. 1180 முதல் 25000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2வது நாள் டிக்கெட் விலை ரூ. 590 முதல் 25000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close