எலக்ட்ரிக் மியூசிக் வேண்டாம்; ரியலா கம்போஸ் பண்ணு, இதுதான் என் அட்வைஸ்: யுவனுக்கு இளையராஜா சொன்னது!

யுவன் சங்கர் ராஜா இளையராஜாவிடம் 'இப்போது எனக்கு ஒரு அறிவுரை கொடுப்பதாக இருந்தால், அது என்னவாக இருக்கும் எனக் கேள்வி எழுப்ப அதற்கு இளையராஜா தனது பாணியில் அறிவுரை வழங்கி இருப்பார்.

யுவன் சங்கர் ராஜா இளையராஜாவிடம் 'இப்போது எனக்கு ஒரு அறிவுரை கொடுப்பதாக இருந்தால், அது என்னவாக இருக்கும் எனக் கேள்வி எழுப்ப அதற்கு இளையராஜா தனது பாணியில் அறிவுரை வழங்கி இருப்பார்.

author-image
WebDesk
New Update
Ilayaraja advice to Yuvan Shankar Raja Pyaar Prema Kadhal audio launch Tamil News

இளையராஜா தனது மகன் யுவன் சங்கர் ராஜா உடன் இசை தொடர்பாக பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 1976 ஆம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளியான 'அன்னக்கிளி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. அதன் பிறகு, இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்தார். அவரது பாடல்கள் காலம் கடந்து பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பி வருகிறது. சினிமாவில் 1,500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனையை நிகழ்த்தி இருக்கும் அவர், இசையின் ராஜாவாக வலம் வருகிறார். 

Advertisment

இசையின் ராஜா, இசைக் கடவுள், இசை அரசன் என ரசிகர்கள் பல்வேறு பெயர்களில் அவரை அன்புடன் அழைத்து வருகிறார்கள். இசைக்கு அவர் அளித்த பங்களிப்பை போற்றும் வகையில், அவருக்கு பல்வேறு விருதுகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. தற்போது மாநிலங்களவை உறுப்பினராகவும் அவரை நியமனம் செய்து அழகு பார்த்துள்ளது. 

இந்நிலையில், இளையராஜா தனது மகன் யுவன் சங்கர் ராஜா உடன் இசை தொடர்பாக பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. 

கடந்த 2018 ஆம் ஆண்டில் வெளிவந்த படம் பியார் பிரேமா காதல். ஹரீஷ் கல்யாண், ரைசா வில்சன் முன்னணி கதாப்பாத்திரங்களாக நடிக்க, படத்தை எழிலன் இயக்கி இருப்பார். இப்படத்திற்கு இசை அமைத்ததுடன் படத்தை தயாரித்தும் இருப்பார் யுவன் சங்கர் ராஜா. முதல் படம் என்பதால் ஆடியோ வெளியிட்டு விழா பிரமாண்டமாக இருந்தது. தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர். 

Advertisment
Advertisements

இந்த விழாவில் தனது மகனை வாழ்த்திப் பேச இளையராஜாவும் கலந்து கொண்டார். அப்போது மேடையில் இளையராஜாவுடன் யுவன் சங்கர் ராஜா உரையாடினார். யுவன் சங்கர் ராஜா இளையராஜாவிடம் 'இப்போது எனக்கு ஒரு அறிவுரை கொடுப்பதாக இருந்தால், அது என்னவாக இருக்கும் என அவங்க கேட்க சொன்னாங்க, நான் கேட்கவில்லை' என்கிறார். அதற்கு இளையராஜா, 'எலக்ட்ரிக்ஸ் மியூசிக் எல்லாம் கட் பண்ணிட்டு, உண்மையான இசைக் கலைஞர்களை வைத்து இசை அமைக்க வேண்டும். 

இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் தெரியும். நீங்கள் கேட்டுக் கொண்டு இருப்பதெல்லாம், எலக்ட்ரிக் மியூசிக் தான். அதனால் உங்களுடைய மூளை நரம்புகள் சரியாக ஆக்டிவேட் ஆகாது. அதனை அமுக்கி விடும். ரியல் மியூசிக் ஆக இருந்தாலும் சரி, எந்தக் கலையாக இருந்தாலும் சரி, செயல்திறன் இல்லையென்றால் கலை இல்லை." என்று அவர் கூறியிருப்பார். 

Recently during Pyaar Prema Kadhal's audio launch, Ilayaraja advised Yuvan Shankar Raja to cut down on electronical...

Posted by Raaga (Malaysia) on Thursday, August 23, 2018
Ilayaraja Yuvan Shankar Raja

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: