நான் உங்க படத்தில் வில்லனா நடிச்சா என்ன பண்ணுவீங்க? அமீரிடம் கேட்ட இசைஞானி!

இசைஞானி இளையராஜா மற்றும் அமீரின் சுவாரசியமான பழைய உரையாடல் ஒன்று வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இசைஞானி இளையராஜா மற்றும் அமீரின் சுவாரசியமான பழைய உரையாடல் ஒன்று வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

author-image
WebDesk
New Update
Ilayaraja and ameer

தமிழ் சினிமா உலகில், இசைஞானி இளையராஜா மற்றும் இயக்குநர் அமீர் இருவரின் சந்திப்புகள் மற்றும் உரையாடல்கள் எப்போதும் சுவாரஸ்யமானவை. அவர்களின் வெவ்வேறு தலைமுறைகள் மற்றும் தனிப்பட்ட கலை அணுகுமுறைகள் இருந்தபோதிலும், பரஸ்பர மரியாதை மற்றும் புரிதல் அவர்களின் உரையாடல்களில் தெளிவாகத் தென்படுகிறது. ஒரு மேடை நிகழ்வில் இளையராஜா, அமீரிடம் கேட்ட கேள்வி, இன்றும் பழைய நினைவுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது. 

Advertisment

இளையராஜா திரைப்பட இசையமைப்பாளர் 1976-இல் "அன்னக்கிளி" திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். அவர் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல மொழிகளில் அவரது இசை குறிப்பிடத்தக்கது.  

அதேபோல அமீர் திரைப்பட இயக்குநர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர். இவர்  இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பிறகு மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இவர் இயக்கிய குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் ராம், பருத்திவீரன் மற்றும் ஆதிபகவன். அத்துடன், அவர் வட சென்னை போன்ற திரைப்படங்களில் நடிகராகவும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்.

இதில் முக்கியமான ஒன்று என்றால் அமீரின் பருத்திவீரன் படத்தில் வரும் அறியாத வயசு, புரியாத மனசு பாடலை இளையராஜா பாடி இருப்பார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா என்றாலும் இந்த பாடலை கிராமத்து தொணியில் இளையராஜாதான் பாடி இருப்பார். இந்நிலையில் இளையராஜா மற்றும் அமீரின் பழைய உரையாடல் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

Advertisment
Advertisements

Conversation reminds me of what Buddha said during his last days when he was asked about a successor. Buddha did not anoint a successor. He was clear that the Dhamma will find one for itself. Be a light unto yourself, நீயே ஒளி நீ தான் வழி Raaja is இசைபுத்தர்...

Posted by Guppy on Friday, September 19, 2025

இளையராஜா மற்றும் அமீர் இருவரும் பழைய நிகழ்ச்சி ஒன்றில் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட சுவாரசியமான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ஒரு மேடை நிகழ்வில், இளையராஜா, இயக்குநர் அமீரிடம் நகைச்சுவையாக, "அமீர்... உங்கள் படத்தில் நான் வில்லனாக நடித்தால் என்ன செய்வீர்கள்?" என்று கேட்டார். எதிர்பாராத இந்தக் கேள்வியால் அமீர் திகைத்து, சிரித்த முகத்துடன் எந்தப் பதிலும் சொல்லாமல் மௌனம் காத்தார். மேலும் அமீர் உங்கள் இசைவாரிசு யார் என்று கேட்டதற்கு கூட, நானே நன்றாக இசை அமைக்கிறேனா என்று தெரியவில்லை என்று பதில் அளித்துள்ளார்.

amir Ilayaraja

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: