இசைஞானி இளையராஜாவும், இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், பல ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட போட்டோக்கள், சமூகவலைதளங்களில் வைரலாக வருகின்றன.
தமிழ் சினிமாவை ஒருகாலத்தில் ஆட்சி செய்த முடிசூடா மன்னர்கள் இந்த இரண்டு ராஜாக்கள். இளையராஜாவும், பாரதிராஜாவும் அமர்ந்திருந்த சிம்மாசனத்தை யாராலும் மறக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது.
சிறு வயதில் இருந்தே நண்பர்களாய் பழகி வந்த அவர்கள் இருவரும் சினிமாவிலும் சேர்ந்தே ஜொலித்தார்கள். ‘செந்தூரப்பூவே செந்தூரப்பூவே… நீதானா அந்த குயில்’.. என காலத்தால் அழியாத பல பொக்கிஷங்களை உருவாக்கினார்கள்.
திடீரென ஒருநாள் இருவருக்கு இடையே விரிசல் ஏற்பட்டது. பல ஆண்டுகால பால்ய நட்பு உடைந்தது. இருவரும் பல ஆண்டுகள் பேசிக்கொள்ளாமல் இருந்தனர். இந்த நிலையில் தான் இளையராஜாவுக்கு திடீரென ஒரு பிரச்சினை வந்ததும், ஓடோடி வந்து உதவிக்கு நின்றார் பாரதிராஜா.
இதன் மூலம் இருவருக்கும் இடையே பல ஆண்டுகளாக இருந்து வந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது. தற்போது இருவரும் நேரில் சந்தித்து பேசிவிட்டனர். அந்த புகைப்படங்களை பாரதிராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ‘இயலும்,இசையும், இணைந்தது.. இதயம் என் இதயத்தை தொட்டது என் தேனியில்’ என பாரதிராஜா இந்த சந்திப்பை பற்றி குறிப்பிட்டுளளார்.