அஜித் படக் குழுவுக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது ஏன்? வழக்கறிஞர் சரவணன் விளக்கம்

குட் பேட் அக்லி திரைப்படத்தில் இளையராஜாவிடம் எந்த முன் அனுமதியும் பெறாமல், ராயல்டியும் கொடுக்காமல் 3 பாடல்கள் பயன்படுத்தப்பட்டு உளதால் ரூ.5 கோடி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் அவரது தரப்பு வழக்கறிஞர் சரவணன் தெரிவித்துள்ளார்.

குட் பேட் அக்லி திரைப்படத்தில் இளையராஜாவிடம் எந்த முன் அனுமதியும் பெறாமல், ராயல்டியும் கொடுக்காமல் 3 பாடல்கள் பயன்படுத்தப்பட்டு உளதால் ரூ.5 கோடி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் அவரது தரப்பு வழக்கறிஞர் சரவணன் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ilaiyaraja saravana

இளையராஜாவின் நோட்டீஸில் இருப்பதென்ன?- வழக்கறிஞர் சரவணன் விளக்கம்

குட் பேட் அக்லி படக்குழுவிடம் இழப்பீடு கேட்டு இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படம் வியாழக்கிழமை (ஏப்.10) திரையரங்குகளில் வெளியானது.

Advertisment

கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் அஜித் ரசிகர்களுக்கு இப்படம் மிகுந்த திருப்தியளித்துள்ளதால் முதல் 3 நாள்களில் ரூ. 100 கோடி வசூலைக் கடந்துள்ளது. இந்நிலையில், குட் பேட் அக்லி திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்த 3 பாடல்களை அவரது அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதற்காக வழக்கறிஞர் மூலம் படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்சள் குருவி மற்றும் இளமை இதோ இதோ ஆகிய பாடல்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதற்காக ரூ. 5 கோடி இழப்பீடு கேட்டுள்ளார். மேலும், 3 பாடல்களையும் படத்தில் திரையிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், 7 நாள்களுக்குள் நிபந்தையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இல்லையென்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகவும் இளையராஜா தெரிவித்துள்ளார். இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இளையராஜாவின் நோட்டீஸ் குறித்து அவரது தரப்பு வழக்கறிஞர் சரணவன் கூறியவை: அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா இசையமைத்த பாடல்கள், அவரது அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளன. எந்த முன் அனுமதியும் பெறாமல், ராயல்டியும் கொடுக்காமல் பயன்படுத்தப்பட்டு உளதால் ரூ.5 கோடி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். மேலும், பாடல்கள் பயன்படுத்தப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என மனு கொடுத்துள்ளோம். குற்றவியல் மற்றும் உரிமையியல் வழக்கு தொடர முகாந்திரம் உள்ளது என்றார்.

Ilaiyaraaja

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: