நீ குப்பை போட்டாலும் என் இசைக்கு நான் உண்மையா இருப்பேன்; பாரதிராஜா மெகா ஹிட் படத்தை கழுவி ஊற்றிய இளையராஜா!

முதல் மாரியாதை படம் பிடிக்கவில்லை என்று பாரதிராஜாவிடம் நேரடியாக கூறிய இளையராஜா. ஆனால் என் இசைக்கு நான் உண்மையாக இருப்பேன் பாடல் நன்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

முதல் மாரியாதை படம் பிடிக்கவில்லை என்று பாரதிராஜாவிடம் நேரடியாக கூறிய இளையராஜா. ஆனால் என் இசைக்கு நான் உண்மையாக இருப்பேன் பாடல் நன்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
ilayaraja bharathi raja

தமிழ் திரையுலகில் இயக்குனர் பாரதிராஜா தனது தனித்துவமான கிராமியப் படைப்புகளுக்காகப் போற்றப்படுபவர். அவரது இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளியான 'முதல் மரியாதை' திரைப்படம், கிராமிய மணம் கமழும் ஒரு காவியமாக இன்றும் கொண்டாடப்படுகிறது. இந்தப் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் ராதா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்து, தங்களது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பர். ஒரு அழகான மற்றும் நெகிழ்ச்சியான காதல் காவியமாக உருவான இந்தப் படம், விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது.

Advertisment

'முதல் மரியாதை' படத்தின் வெற்றிக்கு இசைஞானி இளையராஜாவின் இசை ஒரு முக்கிய காரணம். படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் மக்களின் மனதைக் கொள்ளையடித்தன. குறிப்பாக, "பூங்காற்று திரும்புமா", "வெட்டி வேரு வாசம்", "அந்த நிலாவத்தான்" போன்ற பாடல்கள் இன்றும் பலரின் விருப்பப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. இந்தப்பாடல்கள் காலத்தால் அழியாதவை என்பதற்கு படத்தின் பின்னணி இசையும் காட்சிகளுக்கு மேலும் மெருகூட்டி, கதைக்கு ஆழம் சேர்த்ததுதான்.

இளையராஜா தனது இசைக்கு எவ்வளவு அர்ப்பணிப்புடன் இருந்தார் என்பதை 'முதல் மரியாதை' பட அனுபவம் வெளிப்படுத்துகிறது. இந்தப் படத்திற்கான பாடல்களைக் கேட்ட பிறகு, இளையராஜா பாரதிராஜாவிடம் "இந்தப் படம் எனக்குப் பிடிக்கவில்லை" என்று வெளிப்படையாகத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இளையராஜாவின் இந்தக் கருத்தைக் கேட்டு பாரதிராஜா சற்றும் மனம் தளரவில்லை. மாறாக, இளையராஜாவின் கைகளைப் பற்றிக்கொண்டு, "படம் பிடிக்காமலேயே இவ்வளவு நல்ல பாடல்களைப் போட்டிருக்கிறாய்!" என்று மனம் உருகிப் பாராட்டினார். அதற்கு இளையராஜா சற்றும் யோசிக்காமல், "நீங்கள் குப்பையைக் கொட்டினாலும் என் இசைக்கு நான் உண்மையாக இருப்பேன்" என்று பதிலளித்தார்.  

மேலும் முதல்மரியாதை போன்ற பல படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர். பாரதிராஜா மற்றும் இளையராஜா இருவரும் சினிமாவுக்கு வரும் முன்பே நண்பர்கள். பாரதிராஜா இயக்கிய முதல் திரைப்படமான '16 வயதினிலே' மூலம் தான் இளையராஜா இசையமைப்பாளராக அறிமுகமானார். 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், புதிய பாதை, நிறம் மாறாத பூக்கள், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, முத்துப்பேட்டை மாமா, கடலோரக் கவிதைகள் எனப் பல படங்களில் இந்தக் கூட்டணி இணைந்தது. பாரதிராஜாவின் கிராமியப் படைப்புகளுக்கு இளையராஜாவின் இசை தனித்துவமான கிராமிய மணத்தை அள்ளிக் கொடுத்தது. 
 

Advertisment
Advertisements

இசைஞானியின் வெற்றியின் ரகசியம் ❤️🔥🦋

Posted by Alex Raaja II on Monday, July 14, 2025
Ilayaraja Bharathiraja

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: