Advertisment

'என்னை ஹெட் வெயிட்னு சொல்றவனுக்கு எவ்வளவு ஹெட் வெயிட் இருக்கணும்?' இளையராஜாவின் இந்த பதிலடி யாருக்கு?

இளையராஜாவின் இந்த பதிலடி ஜேம்ஸ் வசந்தன் போன்ற ஆட்களுக்கு தான் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசிக்கொள்கின்றனர்.

author-image
WebDesk
New Update
ilayaraja reply to head weight criticism Tamil News

Ilayaraja

Ilayaraja Tamil News: இசைஞானி இளையராஜாவின் இசை இன்று வரையிலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது . இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், மராத்தி என பன்மொழிகளில் அவர் இசையமைத்துள்ளார். கிட்டத்தட்ட 1400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள அவரின் இசைக்கு மயங்காதவர்களே இல்லை என்று சொல்லலாம். ஆனால் சமீப காலமாக இளையராஜா மீது பல விதமான குற்றசாட்டுகள் வருகின்றன. குறிப்பாக மேடை நாகரீகம் இல்லாமல் இருப்பது, மற்றவர்களை கேவலமாக பேசுவது என பலர் இளையராஜாவை விமர்சனம் செய்து வருகின்றனர்.

Advertisment
publive-image

இந்த நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இளையராஜா தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார். அதில் அவர், 'எல்லோருமே சொல்லுவது இதுதான். அவர் ரொம்ப ஹெட் வெயிட்டான (தலைக்கனம்) ஆளு. என்ன ஹெட் வெயிட்னு சொல்றவனுக்கு எவ்வளவு ஹெட் வெயிட் இருக்கணும்? இல்ல. நான் மியூசிக்கல்லதான் போயிட்டு இருக்கேன். எனக்கு எதப்பத்தியும் கவலையில்லை." என்று கூறியுள்ளார்.

இளையராஜாவின் இந்த பதிலடி யாருக்கு?

சமூக ஊடங்களின் வரவால் யார் வேண்டுமாலும் யாரை வேண்டுமானாலும் கேள்வி எழுப்பும் சூழல் நிலவுகிறது. இதற்கு, அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், பிரபலங்கள் என யாரும் விதிவிலக்கல்ல. அவ்வகையில், இசைஞானி இளையராஜாவின் செயல்பாடுகளை பலரும் சமூக வலைதளங்களில் விமர்சிப்பதை பார்க்க முடிகிறது. அவரது சில கருத்துக்களும், பேச்சும் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகிறது.

இதற்கு சில உதாரணங்களாக, மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் தனது பாடல்களை பாடக் கூடாது என சொன்னது, செக்கியூரிட்டியை வசைபாடியது, எனது இசையால் தான் நீங்கள் எல்லாம் வாழ்கிறீர்கள் என்று ரசிகர்களை பார்த்து சொன்னது, மேடையில் பார்த்திபனிடம் உனக்கு மியூசிக் பற்றி என்ன தெரியும் என்று கேட்டது என இன்னும் பல சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனத்தை சந்தித்தன.

publive-image

சமீபத்தில் மறைந்த மனோபாலாவின் இறப்பிற்கு இரங்கல் வீடியோ ஒன்றை வெளியிட்ட இளையராஜா, அதில் என்னை பார்ப்பதற்காக நான் வீட்டிலிருந்து கிளம்பி கோடம்பாக்கம் பிரிட்ஜை தாண்டுகின்ற நேரத்திலே, காரில் இருக்கும் என்னை பார்த்து விட வேண்டும் என காத்திருந்த எத்தோனையோ இயக்குநர்களில் மனோபாலாவும் ஒருவர். பின் நாட்களில் நடிகரானாலும், படங்களை இயக்கினாலும் என்னிடம் வந்து அப்போது அப்போது சினிமாவில் நடக்கும் விஷயங்களை சொல்லி விடுவார். ரெக்கார்டிங்கில் நடந்தவற்றை கூறியும் மகிழ்வார்.'என்று கூறி இருந்தார்.

publive-image

இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் பலரும் ‘ இது இரங்கல் பதிவு போல தெரியவில்லை, உங்களின் பெருமையை சொல்லும் பதிவு போல தெரிகிறது என்று விமர்சித்தனர். அவர்களில் இசையமைப்பாளரும், தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தனும் ஒருவர். இவர் பல காலமாகவே இளையராஜா மீது பலவிதமான விமர்சனங்களை வைத்து வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு பேட்டியில் இளையராஜாவைவை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.

அதில் இளையராஜா ஒரு சக மனிதராக அவர் மிகவும் மட்டமானவர் என்றெல்லாம் விமர்சனம் செய்து இருந்தார். அண்மையில் கூட இளையராஜா இசைமத்த பாடலில் பிழை இருப்பதாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு சர்ச்சையை கிளப்பி இருக்கிறார் ஜேம்ஸ் வசந்தன். இந்த நிலையில், இளையராஜாவின் இந்த பதில் ஜேம்ஸ் வசந்தன் போன்ற ஆட்களுக்கு தான் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசிக்கொள்கின்றனர்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Tamil Cinema Entertainment News Tamil Ilaiyaraja Ilayaraja Tamil Cinema News Music
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment