சென்னையில் புத்தக வெளியீட்டு விழா ஒன்று வியாழக்கிழமை நடந்தது. இதில் இசைஞானி இளையராஜா கலந்து கொண்டார்.
அப்போது பேசியவர், " தாம் இளமை காலங்களில் இருந்தபோது இசையை கற்றுக் கொண்டேன்; கர்நாடக சங்கீதம் எல்லாம் பெரிய அளவில் தெரியாது.
நான் வாசித்த போது கைதட்டினார்கள். அதற்காக கற்றுக் கொண்டே இருந்தேன். தொடர்ந்து வாசித்தேன். இந்த கைத்தட்டல்கள் அதிகமாகின.
ஒரு கட்டத்தில் எனக்குள் கர்வம் வந்தது. இந்த கைத்தட்டல்கள் இசைக்கா, பாடலுக்கா, வரிகளுக்கா என நினைத்துக் கொண்டேன்.
இப்போது எனக்கு கர்வம் இல்லை; என்னை இசைஞானி என்கிறார்கள். அந்த பட்டம் எனக்கு பொருந்துமா என்பதும் கேள்விக்குறியே. ஆனால் மக்கள் அதனை கொடுத்தார்கள்; ஏற்றுக் கொண்டேன்" என்றார். இளையராஜாவின் இந்த திறந்த பேச்சு பலராலும் கவனம் ஈர்க்கப்பட்டு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“