மாறு வேடத்தில் பாட்டு, உதட்டை சுழற்றி நடித்த சிவாஜி; அது நடிப்பு இல்ல, ஒரிஜினல்: இளையராஜா ஃப்ளாஷ்பேக்!

நடிகர் சிவாஜி கணேசனின் நடைப்பை பற்றி இளையராஜா வியந்து பாராட்டி பேச்சியுள்ளார். சிவாஜி செய்தது நடிப்பு அல்ல அது ஒரிஜினல் என்றும் கூறியுள்ளார்.

நடிகர் சிவாஜி கணேசனின் நடைப்பை பற்றி இளையராஜா வியந்து பாராட்டி பேச்சியுள்ளார். சிவாஜி செய்தது நடிப்பு அல்ல அது ஒரிஜினல் என்றும் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
ilayaraja sivaji

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும் இடையிலான உறவு என்பது வெறும் தொழில்முறை உறவுக்கு அப்பாற்பட்டது. அது ஒரு மரியாதையும் அன்பும் கலந்த ஆழமான நட்பு. பல்வேறு தருணங்களில், இளையராஜா சிவாஜி குறித்து உருக்கமாகவும் பெருமையுடனும் பேசியுள்ளார். இளையராஜா முதன்முதலில் சிவாஜிக்கு 'தீபம்' (1979) என்ற திரைப்படத்திற்கு இசையமைத்தார். அதன் பிறகு, 'ரிஷிமூலம்', 'தியாகம்', 'முதல் மரியாதை' உள்ளிட்ட பல படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர். 'முதல் மரியாதை' திரைப்படம், இருவரின் கலைப்பயணத்திலும் ஒரு மைல்கல்லாக அமைந்தது. இந்தப் படத்தின் பாடல்கள் இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவை.

Advertisment

சிவாஜியின் நடிப்புத் திறமையைக் கண்டு இளையராஜா பலமுறை வியந்திருக்கிறார். 'கவரிமான்' திரைப்படத்தில், தாளம் இல்லாமல் ஒரு கீர்த்தனையை ஜேசுதாஸ் பாடியபோது, அதன் சரியான தொடக்கத்தைக் கண்டுபிடித்து சிவாஜி துல்லியமாக வாயசைத்ததைப் பார்த்து இளையராஜா பிரமித்துப் போனாராம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோரின் திறமை பல தருணங்களில் பாராட்டப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் வெள்ளைரோஜா திரைப்படத்தில் நடந்த ஒரு சுவாரசியமான சம்பவத்தை பற்றி இளையராஜா பகிர்ந்துள்ளார். வெள்ளை ரோஜா திரைப்படம் என்பது 1983 ஆம் ஆண்டு ஏ. ஜெகந்நாதன் இயக்கத்தில் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். வி. விசுவநாதன் தயாரித்த இந்தப் படத்தில் சிவாஜி கணேசன், அம்பிகா, பிரபு, மற்றும் ராதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

sivaji

Advertisment
Advertisements

இந்தத் திரைப்படம், 1982-ல் வெளியான மலையாளத் திரைப்படமான 'போஸ்ட்மார்டம்' படத்தின் மறுஆக்கமாகும். இதில் "நாகூர் பக்கத்திலே" என்ற பிரபலமான பாடலும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த பாடல் குறித்த சில சுவாரசியமான தகவல்களை இளையராஜா கூறியிருப்பது தி ரைஸ் நல்ல சினிமா யூடியூப் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இளையராஜா, நடிகர் சிவாஜி கணேசன் ஒரு முஸ்லீம் நண்பரைப் போல மாறுவேடத்தில் 'நாக்கூர் பக்கத்துல நம்ம பேட்டை' என்ற பாடலை நடித்தார்.அதில் சிவாஜி நடித்து இருக்க மாட்டார் அதுவே அவருடைய இயல்பான குணம் என்று இளையராஜா குறிப்பிடுகிறார். மலேசியா வாசுதேவன் அந்த பாடலை பாடும்போது சிவாஜி பார்த்து இருப்பார் போல அந்த பாடலுக்கு அதேபோல சைகை செய்து இருப்பார் என்று கூறினார். 

நடிகர் சிவாஜி கணேசன் ஒரு முஸ்லிம் நண்பரைப் போல மாறுவேடத்தில் நடித்த, இளையராஜா இசையமைத்த பாடல் "நாகூர் பக்கத்திலே நம்ம பேட்டை". இந்த பாடல் 1983-ல் வெளியான வெள்ளை ரோஜா திரைப்படத்தில் இடம்பெற்றது. இப்பாடலின் வரிகள் இங்கே:

நாகூர் பக்கத்திலே நம்மளோட பேட்டை
நம்ம பேரைக் கேட்டாலே ஊரெல்லாம் கொண்டாட்டம்
ஜல்சா பண்ணுவோம், ஜிகினா போடுவோம்
ஜிஞ்சா ஜில்லா ஜில்லா ஜில்லா ஜோ.

பழைய டவுசர் அலி பாய் அசல் டவுசரு
பழசு புதுசா மாறும் இந்த டவுசரு
ஒய்யார மயிலே உசுப்பேத்தாதே
கையாலே இழுத்தா கைக்குள்ள அடங்காதே.

sivaji Ilayaraja

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: