முதல் பக்தி பாடல், பேரனின் இசையில் பாடிய இளையராஜா: ரிலீஸ் செய்த ரஜினி - கமல்!

இளையராஜா மட்டும் இல்லாமல், இவரது தம்பி கங்கை அமரன், மகன், கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, தம்பி மகன் பிரேம்ஜி உள்ளிட்ட பலரும் இசையமைப்பில் பணியாற்றி வருகின்றனர். இளையராஜாவின் மகள் மறைந்த மகள் பவதாரனியும் இசையமைப்பாளர் தான்.

இளையராஜா மட்டும் இல்லாமல், இவரது தம்பி கங்கை அமரன், மகன், கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, தம்பி மகன் பிரேம்ஜி உள்ளிட்ட பலரும் இசையமைப்பில் பணியாற்றி வருகின்றனர். இளையராஜாவின் மகள் மறைந்த மகள் பவதாரனியும் இசையமைப்பாளர் தான்.

author-image
WebDesk
New Update
Peranh

இந்திய திரையுலகில் தனது இசையால் காலம் கடந்தும் நிலைத்திருக்கும் பெருமைக்கு சொந்தக்காரர் இளையராஜா. 1000 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இவர், தற்போது தனது குடும்பத்தில் இருந்து வந்த 2-வது தலைமுறை இசையமைப்பளரான தனது பேரனுடன் இணைந்து ஒரு ஆல்பம் பாடலில் பாடியுள்ளார்.

Advertisment

70-களில் வெளியான அன்னக்கிளி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாக இளையராஜா, அதன்பிறகு பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார், இவர் மட்டும் இல்லாமல், இவரது தம்பி கங்கை அமரன், மகன், கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, தம்பி மகன் பிரேம்ஜி உள்ளிட்ட பலரும் இசையமைப்பில் பணியாற்றி வருகின்றனர். இளையராஜாவின் மகள் மறைந்த மகள் பவதாரனியும் இசையமைப்பாளர் தான்.இதில் இளையராஜாவின் 2-வது மகன் யவன் சங்கர் ராஜா தந்தையை போலவே இசையில் அதிக பாடல்களை கொடுத்து முன்னணியில் இருக்கிறார். 

கார்த்திக் ராஜாவும் பல படங்களுக்கு இசையமைத்து ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். இந்த வரிசையில், தற்போது இளையராஜாவின் பேரன் யத்தீஷ்வர் ராஜா இணைந்துள்ளார். சினிமாவில் வாய்ப்பு தேடும் இளையராஜாவின் பேரன் யத்தீஸ்வர் ராஜா முதல் பாடலாக பக்திப் பாடல் ஒன்றை இசையமைத்து திருவண்ணாமலையில் வெளியிட்டார். இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் உதவியாளராக இருந்த பி.கே.கார்த்திக், ‘போர போக்குல' என்ற இசை ஆல்பத்தை இயக்கி இருக்கிறார்.

விஷ்ணு எடவன் எழுத்தில் உருவான இந்த இசை ஆல்பத்தில், மறைந்த நடிகர் ரகுவரனின் தம்பி மகன் ரித்திஷ், ‘பைட் கிளப்' படத்தில் நடித்த மோனிஷா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த இசை ஆல்பத்திற்கு, இளையராஜாவின் பேரன் யத்தீஸ்வர் ராஜா இசையமைத்து இருக்கிறார். இரு பதிப்புகளாக உருவாகி இருக்கும் இந்த இசை ஆல்பத்தில், இளையராஜாவுடன் இணைந்து யத்தீஸ்வர் ராஜாவும் பாடல் பாடி இருக்கிறார். இந்த காட்சிகள் தொடர்பான வீடியோ பதிவுகள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
Advertisements

இதனிடையே ‘போர போக்குல’ என்ற இந்த இசை ஆல்பத்தை ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் வெளியிட்டு குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். ஏற்கனவே இளையராஜா குடும்பத்தில் இருந்து கங்கை அமரன், கார்த்திக்ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, பவதாரிணி, பிரேம்ஜி, என இசை பட்டாளங்கள் இருந்து வரும் நிலையில், இந்த பட்டியலில் தற்போது இளையராஜாவின் பேரனும் இணைந்துள்ளார்.

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: