எப்பவுமே ராஜாதான்; சைக்கோ படத்தில் சிலிர்க்க வைக்கும் இளையராஜாவின் 'தாய்மடியில்' பாடல்!
நாட்டுப்புற இசையும் சூஃபி இசையும் கலந்து சோகம் நிறைந்த ஒரு துள்ளலுடன் தொடங்கும் தாய்மடியில் தலையைச் சாய்க்கிறேன் என்ற கைலாஷ் கேரின் குரல் கேட்பவர்களை வேறு ஒரு நிலைக்கு கொண்டு செல்கிறது.
நாட்டுப்புற இசையும் சூஃபி இசையும் கலந்து சோகம் நிறைந்த ஒரு துள்ளலுடன் தொடங்கும் தாய்மடியில் தலையைச் சாய்க்கிறேன் என்ற கைலாஷ் கேரின் குரல் கேட்பவர்களை வேறு ஒரு நிலைக்கு கொண்டு செல்கிறது.
Ilayaraja songs, Thaaimadiyil song, இளையராஜா, தாய்மடியில் பாடல், psycho movie kailash kher mysskin udhaynidhi Stalin
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் சைக்கோ. இந்தப் படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.இந்தப் படத்தில் இளையராஜாவின் இசையைப் பற்றி இயக்குனர் மிஷ்கின் மிகவும் புகழ்ந்து பேசியிருந்தார். சைக்கோ படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையைக் கேட்ட பிறகு இளையாராஜாவை இன்னும் நாம் சரியாக புரிந்துகொள்ளாமலேயே அவருடைய இசையை கேட்டிருக்கிறோமோ என்று எண்ணத் தோன்றியது. அந்தளவுக்கு இளையராஜா இந்தப் படத்தில் மிகச்சிறப்பாக இசையமைத்துள்ளார் என்று இயக்குனர் மிஷ்கின் கூறியிருந்தார்.
Advertisment
தோசை வெறியர்களுக்காகவே ஒரு கடை! சென்னையில் எங்க இருக்குது 'தோச மாமா’கடை?
சைக்கோ படம் வருகிற டிசம்பர் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில் உதயநிதி பார்வை மாற்றுத்திறனாளியாக நடித்துள்ளார்.
Advertisment
Advertisements
இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள “உன்ன நினச்சு நினச்சு” பாடல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது. இந்தப் பாடல் இசை ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இதனைத் தொடர்ந்து அண்மையில், சைக்கோ படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டது. இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள “தாய்மடியில் தலையைச் சாய்க்கிறேன்” என்ற பாடல் கேட்பவர்களை சிலிர்க்க வைக்கும் படியாக அமைந்துள்ளது.
இந்தப் பாடலை பாடகர் கைலாஷ் கேர் பாடியுள்ளார். கடந்த தசாப்தத்தில், மிகச் சிறந்த பாடல்கள் என்று வரிசைப்படுத்தினால் சைக்கோ படத்தில் இடம் பெற்ற 3 பாடல்களும் நிச்சயமாக இடம் பெறும்.
இசைஞானி இளையராஜா தமிழ் சினிமா உலகத்துக்கு இசையமைப்பாளராக அறிமுகமாகி தனது இசையால் கிட்டத்தட்ட அரைநூற்றாண்டு காலம் ஆண்டுகொண்டிருக்கிறார். இடையில், தேனிசை தென்றல் தேவா, ஏ.ஆர்.ரஹ்மான், எஸ்.ஏ.ராஜ்குமார், ஷங்கர் கணேஷ், பரத்வாஜ், இமான், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன்சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, ஸ்ரீகாந்த் தேவா, ஜி.வி.பிரகாஷ், சந்தோஷ் நாராயணன், அனிருத் என எத்தனையோ இசையமைப்பாளர்கள் வந்துவிட்டார்கள். ஆனாலும், இளையராஜா இன்னும் புதுமையான இசையுடன் மூன்று தலைமுறை இசையமைப்பாளர்களுடன் போட்டி போடும் விதமாக இசையை வழங்கிக்கொண்டிருக்கிறார்.
நாட்டுப்புற இசையும் சூஃபி இசையும் கலந்து சோகம் நிறைந்த ஒரு துள்ளலுடன் தொடங்கும் தாய்மடியில் தலையைச் சாய்க்கிறேன் என்ற கைலாஷ் கேரின் குரல் கேட்பவர்களை வேறு ஒரு நிலைக்கு கொண்டு செல்கிறது.
இந்தப் பாடல் குறித்து எழுத்தாளரும் பேராசிரியருமான டி.தர்மராஜ் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிடுகையில், “மிஷ்கினின் சைக்கோ பட ஆல்பத்திலுள்ள 'தாய்மடியில்...' பாட்டு நிஜமாகவே அற்புதம்.
முதல்முறை, காட்சிகளை மறந்து / மறைத்து பாட்டு கேட்காமல், காட்சிகளின் சுவடே இல்லாமல் கேட்கிறேன். வேறொரு அனுபவம்.
இப்பொழுது, ராஜாவின் 'தாய்மடி' வேறு மாதிரி தெரிகிறது. எழுத வேண்டும்.
படம் பற்றி யோசிக்காமல் பாட்டை மட்டும் கேட்டுப் பாருங்கள். படம் வந்து விட்டால் இந்த அனுபவம் வாய்க்காது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பதிவுக்கு பின்னூட்டமிட்டுள்ள எழுத்தாளர் பிரேம், இந்த அதிசயம் , “அம்மா, தாயாக மாற ராஜா அனுமதித்தபோதே அதிசயம் நிழத்தொடங்கிவிட்டது.” என்றும் “ராஜா பித்த அழகியலை ஏற்பதில்லை ஆனால் பித்தத்திற்கு அழகியல் தருவதே அசுரராஜனின் வேலை.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இளையராஜாவின் தாய்மடியில் தலையை சாய்க்கிறேன் பாடல் தற்போது இணையத்தில் இசை ரசிகர்களை தாலாட்டிக்கொண்டிருக்கிறது.இளையராஜா எப்பவுமே ராஜாதான் என்று மீண்டும் ஒருமுறை தனது இசையால் அறிவித்திருக்கிறார்.