பிரேக் அப்: காதலரை பிரிந்த ’நண்பன்’ நடிகை இலியானா!

Ileana Breaks up with Andrew Kneebone: சில மாதங்களுக்கு முன்பு, ஆண்ட்ரூவை "ஹபி" என்று இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டிருந்தார் இலியானா.

By: Updated: August 27, 2019, 11:16:45 AM

Ileana D’cruz: பிரபலங்கள் தங்களது உறவை முறித்துக் கொள்வது தற்போது வாடிக்கையான ஒன்றாகி விட்டது. இது அவர்களின் தனிப்பட்ட விஷயம் என்றாலும், அந்த ஜோடிகள் தங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து மீள முடியாமல் தவித்துப் போகிறார்கள் ரசிகர்கள். இந்தப் பட்டியலில் புதிதாய் இணைந்திருக்கிறது ‘நண்பன்’ ஹீரோயின் இலியானா டி க்ரூஸ் மற்றும் அவரது நீண்டகால ஆஸ்திரேலிய காதலன் ஆண்ட்ரூ நீபோன் ஜோடி.

Ileana breaks up with andrew kneebone இலியானா – ஆண்ட்ரூ

சில மாதங்களுக்கு முன்பு, ஆண்ட்ரூவை “ஹபி” என்று இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டிருந்தார் இலியானா. அதனால் அவர்கள் ரகசியமாக திருமணம் செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி உலா வந்தது. இலியானா – ஆண்ட்ரூ ஆகியோரின் சமூக வலைதள கொஞ்சல்களை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர் என்ற செய்தியை பரப்பிய பாலிவுட் ஊடகங்கள், இப்போது அவர்களின் உறவு முடிந்து விட்ட கதையையும் சொல்கின்றன.

Ileana breaks up with andrew kneebone இலியானா டி க்ரூஸ் – ஆண்ட்ரூ நீபோன்

பிரிந்து விட்ட இந்த ஜோடி, ஒருவரையொருவர் இன்ஸ்டாகிராமில் அன் ஃபாலோ செய்ததோடு, ஆண்ட்ரூவுடன் தான் எடுத்துக் கொண்ட  அனைத்து புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் இருந்து இலியானா நீக்கியிருப்பதும் தெரிய வருகிறது. இதையே ஆண்ட்ரூவும் செய்திருக்கிறார். இந்நிலையில் இது காதலர்களுக்கிடையேயான சிறு ஊடலா அல்லது நிரந்தர பிரிவா என்பது இன்னும் தெளிவாகவில்லை. இதற்கிடையில், ‘பகல்பந்தி’ படத்தில் அனில் கபூர் மற்றும் ஜான் ஆப்ரஹாமுடன் நடித்து வருகிறார் இலியானா.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Entertainment News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Ileana d cruz andrew kneebone love break up

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

JUST NOW
X