Advertisment

இலியானாவுக்கு ஆண் குழந்தை: படத்தை வெளியிட்டு மகிழ்ச்சி

நடிகை இலியானா தனக்கு ஆண் குழந்தை பிறந்ததை தனது இன்ஸ்டா பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ileana D'Cruz blessed with baby boy Koa Phoenix Dola, first pic here Tamil News

அடையாளம் காணமுடியாத வகையில் தனது காதலனுடன் இருக்கும் மங்கலான புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இலியானா பகிர்ந்து இருந்தார்.

Ileana D'Cruz welcomes baby boy, posts picture Tamil News: இந்தி, தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை இலியானா டி குரூஸ். தமிழில் ‘கேடி’ படம் மூலம் அறிமுகமான இவர் விஜய்க்கு ஜோடியாக நண்பன் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், இலியானா சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. குழந்தைக்கு தந்தை யார் என்ற விவரத்தையும் வெளியிடாமலும் இருந்தார்.

Advertisment
publive-image

கர்ப்பிணியான இலியானாவுக்கு சமூக வலைதளத்தில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து வயிறு பெரிதாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். அதன்பிறகு, அடையாளம் காணமுடியாத வகையில் தனது காதலனுடன் இருக்கும் மங்கலான புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இலியானா பகிர்ந்தார். எனினும், தனது காதலன் யார் என்பதை அவர் அறிவிக்கவில்லை.

publive-image

இந்த நிலையில், இலியானா தனது இன்ஸ்டா பதிவில் அவருக்கு கடந்த 1-ம் தேதி தனக்கு மகன் பிறந்ததாக பதிவிட்டுள்ளார். அந்த பதிவுடன் இனிதாக துயில் கொண்டுள்ள தனது மகனின் படத்தை பகிர்ந்துள்ளார். அவருக்கு மகனுக்கு ‘Koa Phoenix Dola’ என பெயர் சூட்டியுள்ளதாகவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். “எங்கள் அன்பு மகனை பூவுலகிற்கு வரவேற்பதில் நாங்கள் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறோம். அதை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.” என்று இலியானா பதிவிட்டுள்ளார்.

நடிகை இலியானா தனக்கு ஆண் குழந்தை பிறந்ததை வெளிப்படுத்தியுள்ள நிலையில், அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Entertainment News Tamil Ileana Dcruz Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment