/tamil-ie/media/media_files/uploads/2019/11/Ileana-DCruz.jpg)
Ileana D'Cruz
Ileana D’cruz Opens up about her breakup : சில மாதங்களுக்கு முன்பு ஆண்ட்ரூ நீபோனுடனான உறவை முறித்துக் கொண்ட நடிகை இலியானா டி க்ரூஸ், இறுதியாக அந்த முறிவு குறித்து மெளனம் கலைந்துள்ளார். சில ஆண்டுகளாக ஆண்ட்ரூவுடன் காதலில் இருந்த இலியானா, அவரை ’பெஸ்ட் ஹபி எவர்’ எனவும் இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டிருந்தார். இவர்கள் இருவரும் ரகசிய திருமணம் செய்துக் கொண்டார்களா என்பது இன்னும் பலரின் கேள்வியாக உள்ளது.
பிரிந்து மாதங்கள் பல கழிந்த நிலையில், தனது தனிப்பட்ட வாழ்க்கையை ஊடக வெளிச்சத்திலிருந்து விலக்கி வைக்க விரும்பும் இலியானா, முதன் முறையாக தனது பிரேக் அப் குறித்து முன்னணி பாலிவுட் ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார்.
அப்போது, ஆண்ட்ரூவுடனான பிரிவினை எவ்வாறு சமாளித்து, அதிலிருந்து மீண்டு வந்தீர்கள் என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த இலியானா, "நான் வருத்தப்படவில்லை. இது போன்ற சூழ்நிலையை நீங்கள் சந்திக்கும்போது தான், உங்கள் குடும்பத்தினரின் மற்றும் நண்பர்களின் மதிப்பை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். இதுதான் எனக்கும் நடந்தது. என்னைப் பொறுத்தவரை, எனது குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களும் எனக்கு ஆதரவளித்தனர்" என்றார்.
இதற்கு முன்பு வேறு ஒரு ஊடகத்திடம் பேசும் போது, தனது தனிப்பட்ட வாழ்க்கையை "மிகவும் புனிதமானதாக" கருதுவதாக இலியானா கூறியிருந்தார். "வதந்திகளின் தட்டில் உணவாக" ஒருபோதும் தான் விரும்பவில்லை எனவும் அப்போது குறிப்பிட்டிருந்தார். தமிழில் கேடி, விஜய்யுடன் நண்பன் ஆகியப் படங்களில் இலியானா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.