Imman Annachi: மக்கள் தொலைக்காட்சியில் ’கொஞ்சம் அரட்டை கொஞ்சம் சேட்டை’ என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமானவர் இமான் அண்ணாச்சி. தனது தமிழ் மற்றும் ஸ்லாங் ஆகியவற்றால் பாப்புலரான அண்ணாச்சி, அதன் பிறகு ஆதித்யா டிவி-யில் ’சொல்லுங்கண்ணே சொல்லுங்க’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
Advertisment
அதைத் தொடர்ந்து சன் டி.வி-யில், கோட் சூட்டில் இமான் அண்ணாச்சி தொகுத்து வழங்கிய, “குட்டிச் சுட்டீஸ்” நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றது. வாரம் நான்கு குழந்தைகள் கலந்துக் கொண்டு, அண்ணாச்சியை கலாய்க்கும் அந்நிகழ்ச்சியை குழந்தைகளும், பெரியவர்களும் பார்த்து மகிழ்ந்தனர். அதில் சுட்டித் தன்மையோடு பேசிய சில குழந்தைகளுக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்தது.
பின்னர் ‘அசத்தல் சுட்டீஸ்’, ‘சீனியர் சுட்டீஸ்’ போன்ற நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். இந்நிலையில் தற்போது ‘கல்லா பொட்டி’ எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவிருக்கிறார் அண்ணாச்சி. ஆனால் சன் டிவி-யில் இல்லை, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில். சி.ஜி ஒர்க்கில் தயாரான அசத்தலான ’கல்லா பொட்டி’ ப்ரோமோவும் வெளியிடப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
ப்ரோமோவை வைத்துப் பார்க்கும் போது, பணத்தை மையப்படுத்திய கேம் ஷோ-வாக இது இருக்கலாம் எனத் தெரிகிறது. தவிர, ’நீர்ப்பறவை’, ‘மரியான்’, ‘புலி’, ’சிங்கம் 3’ போன்ற பல படங்களிலும் அண்ணாச்சி நடித்திருப்பது குறிப்பிடத் தக்கது.