வரிப்பாக்கி செலுத்தாததால் மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவின் வீடு ஏலம்!

26 ஆம் தேதி ஸ்ரீவித்யாவிற்கு சொந்தமான 1 கோடி 14 லட்சம் மதிப்புள்ள வீடு ஏலம் விடப்படுகிறது.,

வரிப்பாக்கி செலுத்தாத காரணத்தால், மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீவித்யாவின் வீட்டை ஏலத்தில் விட இருப்பதாக வருமான வரித்துறையினர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளனர்.

தமிழ், மலையாளம், கன்னடம்  என அனைத்து மொழிகளிலும் நடித்தவர் தான் பிரபல நடிகை ஸ்ரீவித்யா.  1980 காலகட்டத்தில் உச்ச நட்சத்திரமான திகழ்ந்த இவர், கதாநாயகி, அம்மா, வில்லி, அண்ணி என பல கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு புற்று நோயால் மரணமடைந்த இவர் சென்னை அபிராமப்புரத்தில் இருந்த வீட்டில் வசித்து வந்தார்.

இவரின் இறப்புக்கு பிறகு, இந்த வீட்டை அவரின் சகோதரர் நிர்வகித்து வந்தார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு, இந்த வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, அவரின் வங்கி கணக்குகளை வருமான வரித்துறையினர் முடக்கினர். தொடர்ந்து பல வருடங்களாக ரூ.  45,2800 வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. எனவே, சென்னை அபிராமப்புரத்தில் இருக்கும் அவருக்கு சொந்தமான வீடு ஏலத்தில் விடப்படுவதாக வருமான வரித்துறையினர் செய்தித்தாளில் அறிவித்திருந்தனர். இந்த அறிவிப்பின் படி,  வரும் மார்ச்  26 ஆம் தேதி ஸ்ரீவித்யாவிற்கு சொந்தமான 1 கோடி 14 லட்சம் மதிப்புள்ள வீடு ஏலம் விடப்படுகிறது.,

சென்னை நுங்கபாக்கத்தில் உள்ள வருமான வரித்துறையின், புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் இந்த ஏலம் நடத்தப்படு  என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுக்குறித்த நோட்டீஸும் அவரின் இலத்தின் முன்பு ஒட்டப்பட்டுள்ளது. கமல், ரஜினி, விஜய், அஜித் என அனைவருடனும் நடித்து புகழின் உச்சத்தில் இருந்த நடிகை ஸ்ரீவித்யா வாழ்ந்த வீடு ஏலத்திற்கு வந்துள்ளது திரைத்துறையினர் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close