தியேட்டரில் ரஜினி ரசிகர்களுடன் விசில் அடித்துக் கொண்டாடிய பிகில் நடிகை: வீடியோ

Basha Re-release: ரஜினிகாந்தின் தீவிர ரசிகையான இந்துஜா, ரஜினியின் பிறந்தநாளை வெகு விமர்சையாகக் கொண்டாடியிருக்கிறார்.

Basha Re-release: ரஜினிகாந்தின் தீவிர ரசிகையான இந்துஜா, ரஜினியின் பிறந்தநாளை வெகு விமர்சையாகக் கொண்டாடியிருக்கிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Indhuja Ravichandran

Indhuja Ravichandran

Indhuja Ravichandran : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் இந்துஜாவும் ஒருவர். சிறு வயதில் இருந்தே நடிப்பு மீது அதிக ஆர்வம் கொண்ட இந்துஜா, குறும்படங்களில் நடித்து அதன் மூலம் வெள்ளித்திரையில் தோன்றினார். 2017 ஆம் ஆண்டு வெளி வந்த ’மேயாத மான்’ என்ற திரைப் படத்தில் வைபவுக்கு தங்கையாக நடித்து பலரது பாராட்டுகளைப் பெற்றிருந்தார். இதனைத் தொடர்ந்து ‘60 வயது மாநிறம்’, ’மெர்குரி’, ’பில்லா பாண்டி’, ’பூமராங்’, ’மகாமுனி’, ’சூப்பர் டூப்பர்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.

Advertisment

ஜெயலலிதாவின் கதையாக எடுக்கப்பட்ட இணையதள தொடருக்கு தடை கோரிக்கை..

Advertisment
Advertisements

அதோடு சமீபத்தில் தீபாவளிக்கு வெளியான விஜய்யில் பிகில் படத்திலும் நடித்திருந்தார் இந்துஜா. ’பாய்கட்’ ஹேர் ஸ்டைலில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் முக்கியமான ஒருவராக அவர் இடம்பெற்றிருந்தார். இதற்கிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகையான இந்துஜா, ரஜினியின் பிறந்தநாளை வெகு விமர்சையாகக் கொண்டாடியிருக்கிறார். அதவாது தமிழகத்தில் பல தியேட்டர்களில், ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடித்த பல மாஸான படங்கள் திரையிடப்பட்டன.

அந்த வகையில் சென்னை காசி தியேட்டரில் ’பாட்ஷா’ படம் திரையிடப்பட்டது. முகத்தை மூடிய படி ரஜினிகாந்தின் பாட்ஷா படத்தை பார்க்க சென்று உள்ளார். அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள “நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்” பாடல் வரும் போது ஆரவரமாக கத்தி ஆர்ப்பாட்டம் செய்து என்ஜாய் செய்துள்ளார் இந்துஜா. அதோடு இந்த வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். வீடியோவைப் பார்த்த ரசிகர்கள், இந்துஜா இந்தளவுக்கு ரஜினி ஃபேனா என வியந்துள்ளனர்.

Rajinikanth

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: