/indian-express-tamil/media/media_files/sjkb7aqWQjtZ219WoVHC.jpg)
சன்னி லியோன் - தனுஜ் விர்வானி
எம்.டிவியின் ஸ்ப்ளிட்ஸ்வில்லா எக்ஸ் 5 ரியாலிட்டி ஷோவின் இந்த வார இறுதியில், எக்ஸ்க்யூஸ் மீ ப்ளீஸ் நிகழ்ச்சியில் முன்னாள் காதலர்கள், காதலிகள் வில்லாவில் நுழைந்து அவர்களது கண்ணீர், நாடகங்களை அரங்கேற்ற உள்ளனர். எம்.டி.வியின் ஸ்ப்ளிட்ஸ்வில்லா எக்ஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனான எக்ஸ்க்யூஸ் மீ ப்ளீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் தொடங்கி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இந்தியாவின் முதல் டேட்டிங் நிகழ்ச்சியான இந்த ரியாலிட்டி ஷோவில் இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்றுள்ள நிலையில், இந்திய திரைத்துறையில் பிரபல நடிகையான சன்னி லியோனும், தனுஜ் விர்வானியும் இணைந்து தொகுத்து வழங்கி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியின் இந்த வார இறுதி எபிசோடில், மாலை நேரத்தில் நட்சத்திரங்களுடன் தொடங்குகிறது.
இதில் நட்சத்திரங்களின்திகைப்பூட்டும் உடைகள், நாடக நிகழ்ச்சிகளால் உணர்ச்சிக் குவியலான ரோலர் கோஸ்டர் போன்ற உணர்வை ரசிகர்களுக்கு தரும் என்பது நிச்சயம். இதில் காஷிஷ் செய்யும் கடந்தகால யுக்திகள் குறித்த தொடர் பேச்சுக்கள் சூழ்ச்சியை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. அதே நேரத்தில் டாக்டர் அரிகாவைப் பற்றிய அட்டியின் சந்தேகங்கள் விவாதத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.
அதே சமயம் நிகழ்ச்சியில் உண்மையான குழப்பம், உர்பியின் (Uorfi)குறும்புத்தனத்தின் மூலம் வெளிப்படுகிறது. இதனால் பாதுகாப்பான பக்கத்தில் உள்ள போட்டியாளர்களை கண்காணிக்கும் அவர், “இந்தப் பக்கத்தில் எனக்கு சரியான துணை இல்லை என்று தோன்றுகிறது. எனவே உங்கள் பக்கத்துக்கு வந்து குழப்பத்தை ஏற்படுத்த விரும்புகிறேன்" என்று கூறுகிறார்.இதையடுத்து பாதுகாப்பான போட்டியாளர்கள் அனைவரையும் பாதுகாப்பற்ற பக்கத்துக்கு அனுப்பும் விளையாட்டை தொடங்குகிறார் உர்பி.
முன்னாள் காதலர்கள், காதலிகளின் நுழைவின் மூலம் வில்லா தலைகீழாக மாறுகிறது. மேலும் மோதல்களையும் அதிகரித்துள்ள நிலையில், அனைத்து போட்டியாளர்களும் தங்களது காதல் முறிவு மற்றும் தங்களது கடந்த காலங்களைப் பற்றிய அதிர்ச்சிகரமான சம்பவங்களை சொல்வதால், போட்டியாளர்கள் மத்தியில் கடுமையான சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
எம்.டிவியின் இந்த ஸ்ப்ளிட்ஸ்வில்லா எக்ஸ் 5: எக்ஸ்க்யூஸ் மீ ப்ளீஸ் (MTV Splitsvilla X5: ExSqueeze Me Please) நிகழ்ச்சியின் எம்டிவி (MTV) மற்றும் ஜியோசினிமா (JioCinema) செயலியில் இரவு 7 மணிக்கு பார்க்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.