ஒரு பாடலுக்கு நடனமாட அதிக சம்பளம்: டஃப் கொடுக்கும் தமிழ் நட்சத்திரம்; யார் தெரியுமா?

இந்திய சினிமாவில் ஒரு பாடலுக்கு அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் டாப் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்திய சினிமாவில் ஒரு பாடலுக்கு அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் டாப் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
Kereena samantha ans

சினிமாவில் நடிகர் நடிகைகளை தவிர்த்து முக்கிய கேரக்டர்களில் நடிக்கும் நட்சத்திரங்களுக்கு, குறைவான சம்பளம் தான் கொடுக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் ஒரு பாடலுக்கு நடமாடும் நடிகைகளுக்கு இந்திய சினிமாவில் எப்போதுமே வரவேற்பு இருக்கும் என்பதால், அவர்களுக்கு கணிசமான சம்பளம் வழங்குவது திரைத்துறையில் நடந்து வரும் வழக்கம். அந்த வகையில் தற்போது இந்திய சினிமாவில் ஒரு பாடலுக்கு நடனமாட அதிக சம்பவம் வாங்கும் நடிகை யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

இந்த பட்டியலில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் ஒரு நட்சத்திரம் முதலிடத்தை பிடித்துள்ளார். தென்னிந்தியாவின் தமிழ்நாட்டில் பிறந்து தென்னிந்திய சினிமா மட்டுமல்லாமல் தற்போது பாலிவுட் சினிமாவிலும் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ள சமந்தா இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு வெளியான அல்லு அர்ஜூனின் புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றீயா மாமா பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. 

இந்த பாடலுக்கு அல்லு அர்ஜூனுடன் இணைந்து சமந்தா நடனமாடியிருந்தார். இந்த படம் பெரிய வெற்றியை பெறுவதற்கு இந்த பாடலும் முக்கிய காரணமாக அமைந்தது. இந்த ஒரு பாடலுக்கு நடனமாட சமந்தா, ரூ5 கோடி சம்பளம் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய சினிமாவின் டாப் நடிகைகள் வாங்கும் சம்பளத்தை விடவும் இது அதிகமான சம்பளமாகும். இதன் மூலம் இந்தியாவிலேயே ஒரு பாடலுக்கு அதிக சம்பளம் வாங்கிய முதல் நடிகை என்ற பெருமையை பெற்றுள்ளார் சமந்தா. 

இந்த பட்டியலில் 2-வது இடத்தில் இருப்பவர் தமன்னா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ100 கோடி க்ளப்பில் இணைந்தது. இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து அசத்திய தமன்னா, ஒரு பாடலுக்கு நடனமாட ரூ3 கோடி சம்பளம் பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் பாலிவுட் நடிகை, நோரா பதேகி 2 கோடியும், கரீனா கபூர் 1.5 கோடியும் ஒரு பாடலுக்கு நடனமாடி சம்பளமாக பெற்று வருகின்றனர். 

Advertisment
Advertisements

அதேபோல், பாலிவுட் நடிகை கத்ரீனா மற்றும் மலைக்கா அரோரா ஆகியோர் ஒரு பாடலுக்கு நடனமாட சுமார் ரூ50 லட்சம் முதல் ஒரு கோடி வரை சம்பளமாக பெற்று வருகின்றனர். இவர்கள் இருவருமே சமீபகாலாக எந்த படங்களிலும் நடனமாடிவில்லை என்பது குறிப்பிடத்தகக்து.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Tamanna Bhatia Samantha Ruth Prabhu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: