இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டி20 கிரிக்கெட் போட்டி கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மைதானத்தில் இன்று (நவம்பர் 26) இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது. மழை அச்சுறுத்தல் இருப்பதால் இந்த போட்டி முழுமையாக நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியா vs ஆஸ்திரேலியா 2வது டி20 லைவ் ஸ்கோர் ஆங்கிலத்தில்: India vs Australia Live Score, 2nd T20
இந்தியாவில் நடைபெற்ற உலககோப்பை தொடரை வென்ற ஆஸ்திரேலியா அணி கோப்பையுடன் நாடு திரும்பினாலும், விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், சூர்யகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்கள் பலருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பந்துவீச்சில் சொதப்பிய இந்தியா
இதனிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு விசாகப்பட்டிணத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியில், ஜெய்ஸ்வால் 8 பந்துகளில் 21 ரன்கள் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 80 ரன்களும், இஷான் கிஷன் 58 ரன்களும் எடுத்தனர். இறுதிக்கட்டத்தில் ரின்கு சிங் 22 ரன்கள் எடுத்து வெற்றியை தேடி கொடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர்.
அதேபோல் பந்துவீச்சில் இந்திய அணி ரன்களை வாரி கொடுத்த நிலையில், 3 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினர். இதில் எக்ஸ்ரா வகையில் 7 ரன்கள் தான் போனது என்றாலும், ரவி பிஷ்னோய், பிரசீத் கிருஷ்ணா இருவரும் 4 ஓவர்களில் 50 ரன்களுக்கு மேல் வாரி கொடுத்து ஆஸ்திரேலியா அணி எளிதாக 200 ரன்களை கடக்க உதவி செய்தனர். முதல் போட்டியில் பேட்டிங்கால் இந்திய அணி வெற்றி பெற்றாலும், பந்துவீச்சில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியம்.
கட்டாய வெற்றியை நோக்கி ஆஸ்திரேலியா
முதல் போட்டியில் 200 ரன்களுக்கு மேல் குவித்தும் தோல்வியை சந்தித்தால், ஆஸ்திரேலியா அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கும். கடந்த போட்டியில் சதம் கடந்து 110 ரன்கள் குவித்த ஜோஷ் இங்லிஷ் இன்றைய போட்டியிலும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அவரை விரைவாக வீழ்த்த இந்திய அணி வீரர்கள் புதிய யுக்தியை வகுக்க வேண்டும். அதேபோல் பந்துவீச்சில் இந்திய அணியை போல் ரன்களை வாரி கொடுத்தாலும் ஆஸ்திரேலியா பீல்டிங்கில் குறை வைக்கவில்லை. இந்திய அணியில் 3 வீரர்கள் ரன்அவுட் முறையில் வீழ்ந்ததே இதற்கு முக்கிய உதாரணமாக சொல்லலாம்.
பேட்டிங் பீல்டிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட ஆஸ்திரேலியா அணி முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பழி வாங்கவும், முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி அதில் நடந்த தவறுகளை திருத்திக்கொண்டு 2-வது போட்டியில் வெற்றியை தொடரவும் மல்லுக்கட்டும் என்பதால் இந்த போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருவனந்தபுரம் வானிலை எப்படி?
தமிழகம் மற்றும் கேரளாவில் கடந்த சில தினங்களாக மழை பெற்று வரும் நிலையில், இந்த ஆட்டம் மழையால் பாதிக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் போட்டி நடைபெறும் நேரத்தில் மழைக்கான வாய்ப்பு குறைவாக இருக்கும் இதனால் ரசிகர்கள் முழு ஆட்டத்தை ரசிக்க முடியும் முடியும். இருப்பினும், விளையாட்டின் ஆரம்பம் வானிலை மற்றும் ஆடுகளம் எவ்வளவு விரைவாக ஈரப்பதத்தை வெளியேறுகிறது என்பதைப் பொறுத்து அமையும். பகலில் அங்கு மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மாலை நேரத்தில் வானம் தெளிவாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
போட்டிக்கான உத்தேச அணிகள்
இந்தியா - யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருத்துராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, இஷான் கிஷன் (வி), சூர்யகுமார் யாதவ் (கே), ரின்கு சிங், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ரவி பிஷ்னோய்
ஆஸ்திரேலியா : மேத்யூ ஷார்ட், டிராவிஸ் ஹெட், க்ளென் மேக்ஸ்வெல், மேத்யூ வேட் (கே மற்றும் வி), டிம் டேவிட், மார்கஸ் ஸ்டோனிஸ், சீன் அபோட், நாதன் எல்லிஸ், ஆடம் ஜம்பா, கேன் ரிச்சர்ட்சன்
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மேத்யூ வேட், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக, ஜெய்ஸ்வால், ருதுராஜ் களம் இறங்கினர்.இருவரும் அதிரடியாக விளையாடத் தொடங்கினர்.
அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 24 பந்துகளில் 53 ரன்கள் குவித்து அதிரடி அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாதன் எல்லிஸ் பந்தில், ஆடம் ஜம்பாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, இஷான் கிஷன் பேட்டிங் செய்ய வந்தார்.
அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 29 பந்துகளில் 51 எடுத்து அதிரடி அரைசதம் அடித்தார். ஆனால், இவரும் ஜெய்ஸ்வால் போலவே, அரைசதம் அடித்த சிறிது நேரத்திலேயே மார்கஸ் ஸ்டாய்னிஸ் பந்தில் நாதன் எல்லிஸ் இடம் கேட்ச் கொடுத்து 52 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்ய வந்தார்.
மறுமுனையில், அதிரடியாக ஆடினாலும் நிலைத்து நின்று விளையாடிய ருதுராஜ் 39 பந்துகளில் 51 ரன் எடுத்து அதிரடி அரைசதம் அடித்தார்.
10 பந்துகளில் 19 ரன் அடித்த சூர்யகுமார் யாதவ், நாதன் எல்லிஸ் பதில் மார்கஸ் ஸ்டாய்னிஸ் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து ரின்கு சிங் பேட்டிங் செய்ய வந்தார். ரிங்கு சிங் வந்ததுமே சிக்ஸ், ஃபோர் என்று வான வேடிக்கை நிகழ்த்தினார்.
மறுமுனையில் அதிரடியாகவும் நிலைத்து நின்றும் விளையாடிய ருதுராஜ் 43 பந்துகளில் 58 ரன்எடுத்திருந்த நிலையில், நாதன் எல்லிஸ் பந்தில் டிம் டேவிட் இடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து, திலக் வர்மா பேட்டிங் செய்ய வந்தார். அவர் 2 பந்துகளில் 7 ரன் எடுத்தார். ரின்கு சிங் 9 பந்துகளில் 31 ரன் எடுத்தார்.
இறுதியாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 235 ரன் குவித்துள்ளது. இதன் மூலம், இந்திய அணி 236 ரன் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஸ்டீவ் ஸ்மித், மேட் ஷார் களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்திலேயே அதிரடியாக விளையாடினர். 10 பந்துகளில் 19 ரன் எடுத்த மேத் ஷார்ட், ரவி பிஷ்னோய் பந்தில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து, ஜோஷ் இங்லிஸ் பேட்டிங் செய்ய வந்தார்.
மார்கஸ் ஸ்டாய்னிஸ் - டிம் டேவிட் இருவரும் அதிரடியாக விளையாடினார்கள். டிம் டேவி 22 பந்துகளில் 37 ரன் எடுத்திருந்த நிலையில், ரவி பிஷ்னோய் பந்தில் ருதுராஜ் இடம் கேட்ச் கொடுத்டு அவுட் ஆனார். அடுத்து, மேத்யூ வேட் பேட்டிங் செய்ய வந்தார்.
மறுமுனையில், அதிரடியாக விளையாடிய மார்கஸ் ஸ்டாய்னிஸ் 25 பந்துகளில் 45 ரன் எடுத்திருந்த நிலையில், முகேஷ் குமார் பண்தில் அக்சர் படேல் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, சீன் அப்பாட் பேட்டிங் செய்ய வந்தார்.
சீன் அப்பாட், நாதன் எல்லிஸ், ஆடம் ஜம்பா தால் 1 ரன் எடுத்து அவுட் ஆனார்கள். கடைசியாக வந்த தன்வீர் சங்கா 2 ரன்களுடனும் கேப்டன் மேத்யூ வேட் 23 பந்தில் 42 ரன்களுடனும் கடைசிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில், ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 191 ரன் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.