Advertisment

கமல்ஹாசன் முதல் காஜல் அகர்வால் வரை : கலைகட்டிய இந்தியன் 2 இசை வெளியீட்டு விழா ; போட்டோஸ் வைரல்

இந்தியன் 2 படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் ஜூன் 1-ந் தேதி நடைபெற்றது. இப்படம் ஜூலை மாதம் வெளியாக உள்ளது.

author-image
WebDesk
New Update
Indian 2 Audio Launc

இந்தியன் 2 ஆடியோ வெளியீட்டு விழா

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியன் 2 படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் திரைத்துறையின் முக்கிய நட்சத்திரங்கள் பற்கேற்றனர்.

Advertisment

ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான படம் இந்தியன். கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்திருந்த இந்த படத்தில் மனிஷா கொய்ராலா, சுகன்யா செந்தில் கவுண்டமணி உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். லஞ்சத்திற்கு எதிராக போராடும் ஒரு முதியவரின் கதையாக இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது.

28 வருடங்களுக்கு பிறகு தற்போது இந்தியன் 2 என்ற பெயரில் அப்படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. வழக்கம்போல் கமல்ஹாசன் நடிக்கும் இந்த படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் ஜூலை மாதம் வெளியாக உள்ள நிலையில், ஏற்கனவே படத்தில் இருந்து பாரா என்ற ஒரு பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது.

தொடர்ந்து ஜூன் 1-ந் தேதி இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், இயக்குனர், லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இது குறித்து வெளியான வீடியோவில், நெல்சன் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் அந்த இடத்தில் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களுடன் தொடங்கியது.

மற்றொரு வீடியோவில் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மேடைக்கு வந்து கைதட்டல்களை எழுப்பியது. இப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கிறது. இது குறித்து லைகா  புரொடக்ஷன்ஸின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், இந்தியன் 2 இசை வெளியீட்டு விழா நிகழ்வு மற்றும் சிவப்பு கம்பளத்தின் காட்சிகளைப் பகிர்ந்து கொண்டது.

இந்தியன் 2 இல் கமல்ஹாசன், ஊழலுக்கு எதிராகப் போராடும் ஒரு வயதான சுதந்திரப் போராட்ட வீரராக மாறிய சேனாபதியாக மீண்டும் நடிக்கிறார். பல தாமதங்களுக்குப் பிறகு, இந்தியன் 2 இறுதியாக ஜூலை 12 ஆம் தேதி பெரிய திரைகளில் வரத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் மூன்றாவது பாகமான இந்தியன் 3, 2025 இல் திரையரங்குகளில் வெளியிட இலக்கு வைத்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kamalhaasan Indian 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment