உலகநாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் வெள்ளிக்கிழமை இந்தியா முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் பாக்ஸ் ஆபிஸில், குறிப்பாக தமிழ்நாட்டில் வலுவாக அறிமுகமானாலும், விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து எதிர்மறையான வரவேற்பை ஈர்த்தது கவலைக்குரியதாக இருக்கலாம்.
இண்டஸ்ட்ரி டிராக்கர் Sacnilk தகவலின் படி, இந்தியன் 2 வெளியான முதல் நாளில் இந்தியா முழுவதும் ரூ. 26 கோடி வசூலித்தது, அதில் ரூ. 17 கோடி தமிழ், ரூ.1.1 கோடி இந்தி, ரூ.7.9 கோடி தெலுங்கு பதிப்பிலிருந்து வந்தது. மேலும் உலக அளவில் சுமார் 54. 6 கோடி இந்தியன் 2 படம் வசூலித்தது.
இந்தியன் 2 முதல் நாள் வசூல் ரூ.26 கோடி, கமல்ஹாசனின் பிளாக்பஸ்டர் படமான விக்ரம் தொடக்க நாளில் வசூலித்த ரூ. 28 கோடியை விட சற்றே குறைவு. ஆனால் இந்தியன் 2 போலல்லாமல், விக்ரம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது,
மேலும் உலகளவில் ரூ 430 கோடிக்கு மேல் வசூல் செய்து கமல்ஹாசனின் அதிக வசூல் செய்த படமாக மாறியது.
அதற்கு முன், கமல்ஹாசன் கடைசியாக 2018 ஆம் ஆண்டு வெளியான விஸ்வரூபம் 2 திரைப்படத்தில் நடித்திருந்தார், இது பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1996-ம் ஆண்டு வெளியான பிரம்மாண்ட படம், ‘இந்தியன்’. அதில் சுகன்யா, மனீஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார்.
இதன் அடுத்த பாகம் ‘இந்தியன் 2’ என்ற பெயரில் இப்போது வெளியாகி இருக்கிறது. இதில், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உட்பட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகி உள்ளது.
இந்தியன் 2 ஹிந்தியில் ஹிந்துஸ்தானி 2 என்றும் தெலுங்கில் பாரதியுடு 2 என்றும் வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் சமீபத்தில் கல்கி 2898 AD திரைப்படத்தில் நடித்தார், இது உலகளவில் 900 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது.
இப்போது தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“