/tamil-ie/media/media_files/uploads/2019/01/Indian-2-First-Look-Poster.jpg)
Indian 2 First Look Poster
Indian 2 First Look Poster : பொங்கல் பரிசாக அதிரடியாக இந்தியன் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் ஷங்கர் வெளியிட்டு ரசிகர்களை குதுகளப்படுத்தி இருக்கிறார்.
கமல்ஹாசன், சுகன்யா, மனிஷா கொய்ராலா உள்ளிட்டோர் நடித்து 1996ஆம் ஆண்டு வெளியான படம் இந்தியன். பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கிய இத்திரைப்படம், மிகப்பெரும் வரவேற்பை பெற்றதுடன் வசூல் சாதனையும் புரிந்தது.
Indian 2 First Look Poster : இந்தியன் 2 போஸ்டர் ரிலீஸ்
இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக உள்ளது. இப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்க இருக்கிறது என்றும் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார் என்றும் அண்மையில் செய்திகள் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் நடித்துள்ல 2.0 படம் பெரும் சாதனையை படைத்துள்ளதை அடுத்து, உலக நாயகனுடன் இந்தியன் 2-ல் களமிறங்கி பணிகளை தொடங்க இருக்கிறார் சங்கர்.
இந்நிலையில் எந்தவித முன்னறிவிப்பின்றி ரசிகர்களுக்கு சப்ரைஸ் கொடுக்கும் வகையில் படக்குழு இந்தியன் 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.
#indian2 Hi everyone! “ Happy Pongal” pic.twitter.com/rgiuCBBtLq
— Shankar Shanmugham (@shankarshanmugh) 14 January 2019
அத்தோடு படப்பிடிப்பு ஜனவரி 18 ஆம் தேதி தொடங்க உள்ளது என்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர். இது தான் தனது கடைசி படமாக இருக்கும் என்று கமல்ஹாசன் ஏற்கெனவே அறிவித்த நிலையில், இந்த போஸ்டர் கமல் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.